தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 21 maart 2014

இந்திய தேர்தலில் இலங்கை தமிழரின் செல்வாக்கு அதிகரித்துள்ளது!


இந்த முறை இந்திய லோக்சபா தேர்தலில் இலங்கை தமிழர்களின் பிரச்சினை முக்கிய பங்கினை வகிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் தேர்தல் கருத்துக்கணிப்புகளை நடத்தும் நிறுவனம் ஒன்றின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இந்திய பொதுத் தேர்தலின் போது, இலங்கை தமிழர்களின் பிரச்சினை மிகுந்த செல்வாக்கு செலுத்தும் என்றும் நம்பப்பட்டது.

இந்தியாவின் தேர்தல்பெறுபேறுகளையே தமிழீழ விடுதலைப் புலிகளும் நம்பி இருந்ததாக கூறப்பட்டிருந்தது.

ஆனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இலங்கை தமிழர்களின் பிரச்சினை இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்தாது என்று உறுதியாக தெரிவிக்கப்பட்டது.

எனினும் கடந்த இரண்டு வருடங்களில் இந்த நிலைமை மாறி இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலசந்திரன் தொடர்பான புகைப்படங்கள், ஊடகவியலாளர் இசைப்பிரியா கொலை செய்யப்பட்ட காணொளி உள்ளிட்ட சனல் 4 வெளியிட்டிருந்த காணொளிகள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் மந்தமான செயற்பாடு போன்றவற்றால், இந்திய மக்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்த முறை லோக்சபா தேர்தலில் இலங்கை தமிழர்களின் விடயம் முக்கிய பங்கினை வகிக்கும் காரணிகளில் ஒன்றாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Mar 2014
http://www.lankaroad.com/index.php?subaction=showfull&id=1395308252&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten