[ வியாழக்கிழமை, 06 மார்ச் 2014, 12:07.31 AM GMT ]
நாட்டின் இறைமைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் சர்வதேச சமூகம் செயற்படக் கூடாது என அதி வணக்கத்திற்குரிய கர்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மனித உரிமை மீறல் இடம்பெற்றதாகத் தெரிவித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமெனக் கோருவது நாட்டின் உள்விவகாரத்தில் தலையீடு செய்வதாகவே கருதப்பட வேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்றே வழங்கப்பட வேண்டும்.
உள்நாட்டு பிரச்சினைகளை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்வதும், வெளிநாட்டுப் பிரச்சினைகளை உள்நாட்டுக்கு எடுத்துச் செல்வதும் ஆரோக்கியமானதல்ல.
இதனால் எவரும் வெற்றியடையப் போவதில்லை.
இவ்வாறான நடவடிக்கைகளினால் இறைமையுடைய நாடுகளில் புறச் சக்திகள் தலையீடு செய்ய நேரிடும்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.
உள்நாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அதி வணக்கத்திற்குரிய கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten