தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 21 maart 2014

பிரபாகரனை பற்றி கவிதை எழுதினேன்: மணிப்பூர் பெண் போராளி இரோம் சர்மிளா !!



போரில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்யப்பட்டு விட்டதாக அரசாங்கம் அறிவித்த போது நான் அவரை அடிப்படையாக வைத்து கவிதை ஒன்றை எழுதினேன் என மணிப்பூர் பெண் போராளி இரோம் சர்மிளா தெரிவித்துள்ளார்.
சர்மிளா தனியொரு பெண்ணாக கடந்த 13 வருடங்களாக வன்முறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது இந்திய ஜனநாயகத்தை ஆட்டங்காண வைத்துள்ளது.
இராணுவத்திற்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதன் காரணமாக 1958 ஆம் ஆண்டின் விசேட சட்டத்தின் கீழ் நீதிமன்றம் ஊடாக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இரும்பு பெண்மணி என்றால் அனைவருக்கும் தெரியும் மணிப்பூர் மக்கள் இந்த பெயரை அவருக்கு சூட்டியுள்ளனர். அவரது உண்மையான பெண் இரோம் சர்மிளா சானு.
மணிப்பூர் அரசாங்கத்துடனான சட்ட ரீதியான போராட்டத்திற்கு பின்னர் இந்திய ஊடகவியலாளர் ஒருவர் மணிப்பூரின்  இரும்பு பெண்மணியென வர்ணிக்கப்படும் சர்மிளாவிடம்  எடுத்த பிரத்தியேக பேட்டி  பின்வருமாறு,
வன்முறையற்ற பல போராட்டங்கள் இருக்கும் போது ஏன் நீங்கள் உண்ணாவிரதத்தை தெரிவு செய்தீர்கள்?
சர்மிளா- என்னிடம் அதிகாரமில்லை. பணமில்லை. உடல் நிலை சார்ந்த வலுவில்லை. எனது ஒரே தெரிவு உண்ணாவிரதம். சுதந்திரப் போராட்டங்களில் இது புதிய ஒன்றல்ல. பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராக மகாத்மா காந்தி இந்த வழியை பயன்படுத்தினார்.
மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரஜை என்பதால் தவறானவற்றுக்கு எதிராக போராட்ட எனக்கு உரிமையுள்ளது.
நீங்கள் ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறீர்கள், அனால் மத்திய அரசாங்கம் எந்த பிரதிபலிப்புகளை வெளிக்காட்டவில்லையே. அவர்கள் உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்வார்களா?.
சர்மிளா- எனது போராட்டம் மிகவும் வலுவானது என்று நான் எண்ணுகிறேன். தற்போது அரசாங்கம் தூக்கத்தில் இருந்து விழித்து கொண்டுள்ளது. நானும் எனது போராட்டமும் அவர்களுக்கு தலைவலியாக மாறியுள்ளது. நான் எந்த ஆயுதங்களை கொண்டு வன்முறை ரீதியில் எனது கோரிக்கைகளை முன்வைக்கவில்லை. எனது கோரிக்கை ஒரு நாள் வெற்றி பெறும் என நான் நம்புகிறேன்.
கடந்த 13 வருடங்களாக உங்கள் தாயை காணாதது பற்றி எப்படி உணர்கிறீர்கள்?. ( சர்மிளா அழுகின்றார்)
சர்மிளா- அடிக்கடி நான் கனவில் எனது தாயாரை பார்ப்பேன். நாங்கள் ஆவியால் இணைந்திருக்கின்றோம்.
உங்கள் போராட்டமானது இராணுவ பிரச்சினையை அடிப்படையாக கொண்டது. உங்கள் உண்ணாவிரதப் போராட்டமானது முழு மணிப்பூர் பிரச்சினைக்கு தீர்வை பெற்று தராது என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே. இந்த விமர்சனம் பற்றிய உங்களுடைய கருத்து என்ன?.
சர்மிளா- எனக்கு தெரியும். எனது பிரதான கோரிக்கைகள் நிறைவேறிய பின்னர் மணிப்பபூர் மற்றும் மணிப்பூர் மக்களின் ஏனைய பிரச்சினைகளுக்காக போராடுவேன். மாநிலத்தின் அனைத்து மக்களுக்காகவும் நான் எனது கரத்தை விரிவுப்படுத்துவேன்.
தமிழீழத்திற்காகவும் இந்திய இராணுவத்திற்கு எதிராகவும் 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த திலிபனை பற்றி நான் கேள்விப்பட்டுள்ளேன்.
இலங்கையில் தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் உங்களுடைய பார்வை எப்படி உள்ளது?
சர்மிளா- அதாவது தமிழ்ப் புலிகளின் போராட்டம்!. அது பற்றி நான் படித்திருக்கின்றேன். அது தமிழ் மக்களுக்கு இலங்கைக்கும் இடையிலான பாரிய மோதல் என்று நான் உணர்கின்றேன்.
போரில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்யப்பட்டு விட்டதாக அரசாங்கம் அறிவித்த போது நான் அவரை அடிப்படையாக வைத்து கவிதை ஒன்றை எழுதினேன். அந்த கவிதையின் தலைப்பு "வேலுப்பிள்ளை பிரபாகரன்"
ஆனால் என்னை மன்னித்து விடுங்கள் நான் திலிபனின் உண்ணாவிரதப் போராட்டம் பற்றி அறிந்திருக்கவில்லை.
http://www.lankawin.com/show-RUmsyDRVLWmq7.html

Geen opmerkingen:

Een reactie posten