தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 13 maart 2014

மலேசிய விமானத்தை இனந்தெரியாத இடத்திற்கு கடத்தியுள்ளார்கள் !


சமீபத்தில் காணமல்போன மலேசிய விமானத்தை சிலர் கடத்திவிட்டார்கள் என, திட்டவட்டமாக அமெரிக்கா இன்று(13) அறிவித்துள்ளது. அமெரிக்கா தனது தேடுதலை முடிவுக்கு கொண்டுவந்துள்ள அதேநேரம், விமானம் கடத்தப்பட்டு இனந்தேரியாத ஒரு இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது என்ற அதிர்சி தகவலையும் வெளியிட்டுள்ளது. மலேசிய விமானம் பறப்பில் ஈடுபட்டவேளை அது திடீரென ராடர் திரையில் இருந்து மறைந்தது. அது காணமல் போனது என்று அறிவிக்கப்பட்டு சுமார், 4 மணித்தியாலத்திற்கு பின்னர் அது மீண்டும் பறப்பில் ஈடுபட்டுள்ளதற்கான ஆதாரங்களை அமெரிக்கா பெற்றிருக்கிறது என்று கூறப்படுகிறது. 

இதன் அடிப்படையிலேயே இந்த விமானத்தை எவரோ கடத்தியுள்ளார்கள் என்று அமெரிக்க இராணுவத்தினர் தற்போது கூறியுள்ளார்கள். மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள ஏதோ ஒரு மர்மமான இடத்தில் இந்த விமானம் தரையிறக்கப்பட்டு பின்னர் 4 மணித்தியாலம் கழித்து அது மீண்டும் பறந்துசென்று பிறிதொரு இடத்தில் இறங்கி இருக்கலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதேவேளை சீன சட்டலைட் நிறுவனம் ஒன்று, விமானத்தில் சிதைவுகள் காணப்படுவதாக படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள். அதில் காணப்படும் சிதைவுகள் மலேசிய விமானத்தின் சிதைவுகள் அல்ல என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே சீனா வெளியிட்ட படமும் சற்றும் சம்பந்தமில்லாத படமே. தற்போது எந்த நாட்டிற்கு இந்த விமானத்தை கொண்டுசென்றிருப்பார்கள் என அமெரிக்க சி.ஐ.ஏ உளவு நிறுவனம் ஆராய்ந்து வருகிறது. இது குறித்து மேலதிக தகவல்கள் வெளியாக உள்ளது. 

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6527

Geen opmerkingen:

Een reactie posten