தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 maart 2014

இலங்கை ஜனாதிபதியின் தோல்வியே சர்வதேச விசாரணைக்கு காரணம்!– டேவிட் கமரூன்

இந்திய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் “தமிழீழம்”emaarru!!

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் இலங்கையில் தமிழீழம் அமைத்துத் தரப்படும் என்று மறைமுகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் லோக்சபா தேர்தலின் நிமித்தம் காங்கிரஸ் கட்சி இன்றைய தினம் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருந்தது.
இதில் இலங்கையில் மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குறிப்பாக “தமிழ் மக்கள் அதிகமாக வாழ்கின்ற மாகாணத்துக்கான அதிகாரப் பகிர்வினை உறுதி செய்வதுடன், இதன் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தன்னிச்சையாக செயற்படு வகையிலான மாகாணமாக உருவாக்க வழி செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணங்களின் தன்னிச்சையான செயற்பாடு என்பது, மத்திய அரசாங்கத்தில் இருந்து கட்டுப்பாடுகளில் இருந்து முற்றாக விலகி, வரி அறவிடுதல், காவற்துறையை கட்டுப்படுத்தல், அரச பதவிகளை நியமித்தல் உள்ளிட்ட அதிகாரங்களை கொண்ட சுயாதீனமான இயக்கமாகும்.
அவ்வாறான சுயாதீன இயக்கத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உருவாக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளமையானது, மறைமுகமாக தமிழீழத்தையே குறிப்பிட்டிருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
எனினும் இது தேர்தல் நிமித்தம் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் என்பதால், அதனால் பலன் ஒன்றும் இல்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/63575.html

இலங்கை ஜனாதிபதியின் தோல்வியே சர்வதேச விசாரணைக்கு காரணம்!– டேவிட் கமரூன்

தாம் மேற்கொண்டிருக்க வேண்டிய பணிகளை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேற்கொள்ள தவறிவிட்டதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையிலேயே இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை இன்னும் ஓரிரு மணித்தியாலங்களில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இதில் அந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டால், இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை மேற்கொள்ள மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/63580.html

Geen opmerkingen:

Een reactie posten