தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 maart 2014

மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளர் உயிரிழந்த விபத்து தொடர்பான CCTV காட்சி (இதயம் பலவீனமானவர்கள்ளுக்கு எச்சரிக்கை)

மக்கள் விடுதலை முன்னணியின் கம்பஹா மாவட்டத்தின் மாகாண சபைத் தேர்தல் வேட்பாளர் சுமதிபால மானவடு, மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது அவரை லொறியால் மோதிவிட்டு தப்பிச்சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமதிபால மானவடு கொழும்பு – கண்டி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது இம்புல்கொட பகுதியில் லொறி ஒன்றுடன் மோதியதில்  விபத்திற்குள்ளானார்.
இதனையடுத்து, கம்பஹா ஆதார வைத்தியசாலையில் காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
அவரை லொறியால் மோதிவிட்டு சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்துடன் தொடர்புடைய லொறியையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
இந்த விபத்து இடம்பெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வியில் விபத்து இடம்பெறும் விதம் பதிவாகியுள்ளது.
கீழே இணைக்கப்பட்டுள்ள காணொளி அதிர்ச்சி தரக்கூடும் என்பதால் சிறுவர்கள் மற்றும் இதயம் பலவீனமானவர்கள் இதனைப் பார்ப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
http://www.jvpnews.com/srilanka/63468.html

Geen opmerkingen:

Een reactie posten