மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நோக்கி 239 பயணிகளுடன் சென்ற விமானம் கடந்த 8 ஆம் திகதி காணாமல் போனது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.
மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கும் என்று மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார்.
எனினும் மனம் பொறுக்காது பயணிகளின் உறவினர்கள் வேதனையில் உள்ளனர். விமான என்ன ஆனது என்பது குறித்து தெரியாத நிலையில் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.
இந்த நிலையில் மலேசிய ராணி ராஜா அகோங் தவுன்கு ஹாஜாக் ஹமினாக் கிலன்மேரி கோல்ப் மற்றும் கண்ட்ரி கிளப் கோலாலம்பூரில் நடத்திய ஈரீ ஆசிய கோப்பை கோல்ப் போட்டியில் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் விளையாடி வருவதாக உள்ளூர் பத்திரிகைகள் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.
மக்களின் இன்ப துன்பங்களில் கலந்து கொள்ள வேண்டிய இளவரசி இவ்வாறு பொறுப்பில்லாமல் விளையாடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/63601.html
Geen opmerkingen:
Een reactie posten