தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 10 maart 2014

நடுக்கடலில் ஏவுகணைகளுடன் சிக்கிய கப்பல் இஸ்ரேலிய துறைமுகத்துக்கு வந்து !



ஈரானிய ஏவுகணைகளுடன் நடுக்கடலில் இஸ்ரேலிய கடற்படையால் மடக்கப்பட்ட சரக்குக் கப்பல், இஸ்ரேலிய போர்க்கப்பலால் இழுத்து வரப்பட்டு, இன்று அதிகாலை இஸ்ரேலிய ராணுவ துறைமுகமான எய்லாட்டை வந்தடைந்தது. க்ளோஸ்-சி என்ற பெயருடைய இந்தக் கப்பல், பனாமா கொடி பறக்கும், சிவில் கார்கோ கப்பல். இந்த கப்பல், செங்கடலில் (Red Sea), சூடான் நாட்டுக்கும் எரித்ரியாவுக்கும் இடையே சென்றுகொண்டிருந்தபோதே, இஸ்ரேலிய கடற்படை கப்பல்கள் சென்று மடக்கின. அதையடுத்து, கப்பலுக்குள் ஏறிய இஸ்ரேலிய கடற்படையினர், கப்பலில் உள்ள கார்கோவை செக் பண்ணியபோது, ஏவுகணைகள் இருப்பது தெரியவந்தது.

இந்தக் கப்பல் சிக்கிய பின்னணி தகவல்களை விறுவிறுப்பு.காமில் நாம் வெளியிட்ட, “ரகசிய ஏவுகணை ஷிப்மென்ட்டுடன் நடுக் கடலில் சிக்கியது, பனாமா சரக்கு கப்பல்!” கட்டுரையில் பார்க்கவும். அதற்கான லிங்க், இந்த செய்தியின் கீழேயுள்ளது. செங்கடலில் சூடான் நாட்டுக்கும் எரித்ரியாவுக்கும் இடையேயுள்ள இந்த இடம், இஸ்ரேலிய ராணுவ துறைமுகம் எய்லாட்டில் இருந்து, சுமார் 1000 கடல் மைல்கள் தள்ளி, சர்வதேச கடல் பகுதியில் உள்ளது. அங்கிருந்து கப்பலை இழுத்து வந்தது, இஸ்ரேலிய போர்க்கப்பல் ஒன்று. இன்று அதிகாலை கப்பல் எய்லாட் துறைமுகத்துக்குள் வந்து நங்கூரமிடப்பட்டதை அடுத்து, அந்த நகரமே, ராணுவ பாதுகாப்பு வளையத்துக்குள் வந்துள்ளது.

இந்த ஏவுகணைகள், ஹமாஸ் இயக்கத்துக்கு சென்று கொண்டிருந்த (ஹமாஸ், அதை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், ஏவுகணைகள் அவர்களுக்குதான் என்பது அனைவருக்கும் தெரியும்) காரணத்தால், இந்த நடிவடிக்கை.
“ஹமாஸ் இயக்கம், தமது தற்கொலை தாக்குதலாளிகளை அனுப்பி, துறைமுகத்துக்குள் வந்துள்ள கப்பலை வெடிக்க வைக்க திட்டமிடுகிறது” என இஸ்ரேலிய உளவுத்துறைக்கு உளவுத் தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதையடுத்தே இன்று அதிகாலை முதல் எய்லாட் நகரமே, ராணுவ பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. துறைமுகத்துக்கு செல்லும் Rte 90 வேகப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

க்ளோஸ்-சி கப்பலில் உள்ள ஏவுகணைகள் இன்று துறைமுகத்தில் இறக்கப்படும் எனவும், அனைத்து விபரங்களும் நாளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள செய்தியாளர் மாநாட்டில் அறிவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம்.

Geen opmerkingen:

Een reactie posten