தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 maart 2014

மலேசியா விமான பாகங்களை கண்டுபிடித்தது தாய்லாந்து?

காணாமல் போன மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் இந்திய பெருங்கடலில் காணப்படுவதாக ஆஸ்திரேலிய பிரதமரான டோனி அப்பாட் அந்நாட்டு பாராளுமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்தார்.

விமானத்தின் பாகங்கள் கிடப்பதாக அவர் குறிப்பிட்ட இடத்தில் 8க்கும் மேற்பட்ட நாடுகள் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தன. பெர்த்திலிருந்து தென்மேற்காக 2500 கி.மீ. தூரத்தில் மிதக்கும் விமானத்தின் பாகங்களை மீட்க ஆஸ்திரேலியா தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
24 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய பாகம் மிதக்கும் காட்சி ஆஸ்திரேலிய செயற்கைக்கோளில் பதிவானது. அதுமட்டுமின்றி வேறு சில சிறுபாகங்களும் கடலில் மிதப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று தாய்லாந்து நாட்டின் செயற்கைகோள் ஒன்று, விமானத்தின் பாகங்கள் மிதப்பதாக கூறப்படும் பகுதியில் 300 பாகங்கள் மிதக்கும் காட்சியை பதிவு செய்துள்ளது.
இது குறித்த தகவல்களை வெளியிட்ட தாய்லாந்து நாட்டின் வான் தொழில்நுட்ப மேம்பாட்டு மைய அதிகாரி அனான்ட் ஸ்னிட்வாங்ஸ் கூறுகையில், “2 மீட்டரிலிருந்து 15 மீட்டர் நீளமுள்ள பல்வேறு பாகங்கள் கடலில் மிதக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் விமானத்தின் பாகங்கள் தானா என எங்களால் உறுதிப்படுத்த முடியாது” என்று தெரிவித்தார்.
இதனிடையே விமான பயணத்தின் போது கடைசி கட்டமாக என்ன நடந்தது என்று கண்டுபிடிக்க உதவும் கருப்பு பெட்டி தனது சக்தியை ஏப்ரல் மத்திக்குள் இழந்துவிடும் என்று கூறப்படுகிறது.
thai-sat
thai-sat2
- See more at: http://www.canadamirror.com/canada/23665.html#sthash.tPHWRdlz.dpuf

Geen opmerkingen:

Een reactie posten