தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 29 maart 2014

ஜெனிவா தீர்மானத்துக்கு இட்டுச் சென்ற இலங்கைப் போர்! - ஐநாவிலிருந்து 7 பேர் கொண்ட குழு விசாரணைக்கு வரும்!



கனடிய தமிழர் பேரவை சிறீலங்கா மீது கொண்டுவரப்பட்ட பன்னாட்டு விசாரணைப் பொறிமுறையை வரவேற்கிறது
[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 06:13.44 PM GMT ]
ஜெனீவா சுவிஸ்லாந்து-கனடிய தமிழர் பேரவை சிறீலங்கா பற்றி 'மீள்நல்லிணக்கம் பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகள்'  என்ற தலைப்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை வரவேற்கின்றது.
இந்தத் தீர்மானம் இன்று காலை ஐ.நா. மனித உரிமை பேரவையின் 25 ஆவது அமர்வில் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் மனித உரிமை ஆணையரது பணிகம் சிறீலங்காவில் உள்ள இருதரப்பையும் 'கடுமையான மீறல்கள் மற்றும் மனித உரிமைகள் தவறாகப் பயன்படுத்தல் மற்றும் அது தொடர்பான குற்றங்கள்' பற்றி ஒரு பன்னாட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆணையை அளிக்கிறது. இந்தத் தீர்மானம் சிறீலங்காவில் இழைக்கப்பட்ட கடுமையான குற்றங்கள் தொடர்பாக பொறுப்புக் கூறும் ஒரு வழிமுறைக்கு அடிகோலுகிறது.
உயர் ஆணையாளருக்கு அளிக்கப்பட்ட இந்த விரிவான உண்மையைக் கண்டறியும் ஆணை சிறீலங்கா தீவில் பொறுப்புக் கூறல் மற்றும் நீதியை எட்டுவதற்கு ஒரு முக்கியமான படிக்கட்டாக அமையும். பேரவை உயர் ஆணையாளருக்கு வழங்கியிருக்கும் இந்த அறிவுறுத்தல் 'உண்மைகளைக் கண்டறியும் வல்லமையை அவருக்குக் கொடுக்கும்.
மேலும் இந்த உண்மைகள் 2011 ஆம் ஆண்டு வல்லுநர் குழு சமர்ப்பித்த அறிக்கையின் தொடர்ச்சியாகவும் இருக்கும். உயர் ஆணையாளரின் பணியகத்துக்கு வழங்கப்படும் விரிவான அதிகாரங்கள் உண்மை வெளிவர வழிகோலுவதோடு சிறீலங்காவுக்கும் ஒரு கனமான செய்தியையும் தெரிவிக்கிறது. அதாவது பன்னாட்டு சமூகம் உள்ளாட்டில் மீள்நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் பற்றி சிறீலங்கா முன்னெடுத்ததாகச் சொல்லப்படும் வழிமுறைகள் பற்றி நம்பிக்கை இழந்து விட்டது என்பதாகும். இந்தத் தீர்மானம் போர்க்குற்றங்கள் மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை உட்பட கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் அது தொடர்பான குற்றங்கள் தவறாகப் பயன்படுத்தியது பற்றி விசாரணை மேற்கொள்ள உயர் ஆணையாளருக்கு அதிகாரம் வழங்குகிறது.
'சிறீலங்காவில் நடந்த கொடிய போரில் பலியான மக்களுக்கு நீதி வழங்கவும் உண்மையைக் கண்டறியவும் பன்னாட்டு சமூகம் இறுதியாக ஒரு பொருள்பொதிந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த வழிமுறை பன்னாட்டு மனித உரிமைகள் மானிடத்துக்கான சட்டம் இரண்டையும் படுமோசமான முறையில் மீறும் அரசுகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' இவ்வாறு கனடிய தமிழர் பேரவையின் சட்ட ஆலோசகர் கரி ஆனந்தசங்கரி' தெரிவித்தார். 'இந்த தீர்மானம் போரில் இறந்துபட்ட 70,000 உயிர்களை மீட்டுத்தரப் போவதில்லை.
இருந்தும் தங்களது அன்புக்குரியவர்களது சாவுக்குக் காரணமாக இருந்தவர்கள் நீதிக்கு முன் இறுதியாக நிறுத்தப்படுவார்கள் என்ற செய்தி அந்தக் குடும்பங்களுக்குத் தேறுதல் அளிக்கக் கூடும்' என ஆனந்தசங்கரி சொன்னார்.
போர் முடிந்த கையோடு பொறுப்புக் கூறல் பற்றிக் கண்டறியத் தவறியதால் சிறீலங்காவில் இப்படியான ஒரு பொறிமுறையை உருவாக்க முன்மொழிந்த பல நாடுகள் கடுமையாக உழைத்தன. அமெரிக்கா. ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடா போன்ற நாட்டின் தலைவர்களுக்குக் கனடிய தமிழர் பேரவை நன்றியறிதல் உள்ளதாக இருக்கிறது. குறிப்பாக இதனைச் செய்து முடிக்கக் கனடிய அரசு முக்கியமான பாத்திரம் வகித்தது.
'தமிழர்களுக்கு நீதி கிடைக்கப் பாடுபட்ட தலைமை அமைச்சர் ஹார்ப்பர் அமைச்சர் பெயார்ட் ஒட்டாவா ஜெனீவா மற்றும் கொழும்பில் உள்ள வெளியுறவு அமைச்சின் பணியாளர்கள் ஆகியோருக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்' என கனடிய தமிழர் பேரவையின் தேசியப் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை குறிப்பிட்டார்.
கனடிய தமிழர் பேரவை அரசசார்பற்ற நிறுவனங்களில் பணிபுரியும் கூட்டாளிகள் மனித உரிமை பாதுகாவலர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகங்களின் உறுப்பினர்கள் ஆகியோரது அயராத உழைப்பை நன்றியோடு ஏற்றுக்கொள்கிறது. இவர்கள் மனித உரிமைப் பேரவை தீர்க்கமான தீர்வையும் மற்றும் வினையையும் ஆதரித்து அசாதாரண ஆபத்தான சூழலில் வாதிட்டனர். சிறீலங்காவில் நீதியையும் பொறுப்புக் கூறலையும் நிலைநாட்ட அச்சமற்ற ஆழ்ந்த ஈடுபாட்டோடு இவர்கள் ஈடுபட்டது கனடிய தமிழர் பேரவைக்குப் புத்துணர்வை நல்கியுள்ளது. நாங்கள் சிறீலங்கா தீவில் நிரந்தர சமாதானத்துக்குப் பாடுபடும் இந்தத் தலைசிறந்த மனித உரிமை வெற்றியாளர்களுக்கு - தமிழர் மற்றும் சிங்களவர்- எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
சிறீலங்கா தீவில் மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஒரு குறிப்பிடத்தக்க படிக்கல்லாகும். மனித உரிமைப் பேரவையானது உயர் ஆணையாளர் பணியகத்துக்கு ஒரு உண்மையைக் கண்டறியும் குழுவை உருவாக்குவதற்கு வேண்டிய அதிகாரத்தை அளித்துள்ளது. இந்த விரிவான ஆணையை நிறைவேற்றுவதற்கு வேண்டிய பொருத்தமான வளங்களை உயர் ஆணையாளருக்கும் ஆணையாளரின் பணியகத்துக்கும் கிடைக்குமாறு செய்ய வேண்டும். உயர் ஆணையாளரும் ஆணையாளரின் அலுவலகமும் சாட்டப்படும் போர்க் குற்றங்கள். மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் படுகொலை மனித உரிமை மீறல்கள் மானிடத்துக்கு எதிரான சட்டம் பற்றிய விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என கனடிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
பிரித்தானியா, கனடா, அமெரிக்க நாடுகளின் அறிக்கை குறைப்பின் பின்னணியில் இலங்கைக்கு வெற்றியா? விபரிக்கிறார் கரி ஆனந்தசங்கரி
இன்றைய சூழ்நிலையில் எதிர்பார்த்த விடயங்களை பிரித்தானியா, கனடா, மற்றும் அமெரிக்கா போன்ற  நாடுகள் தனது உத்தேச திட்டத்தில் உள்வாங்காமையின் பின்னணியில் இலங்கை அரசின் செயற்பாடு உள்ளதா என ஐயம் உண்டு என சட்டத்தரணியும் கனடியத் தமிழர் பேரவை சட்ட ஆலோசகருமான கரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இன்றைய நிலையில் இலங்கை அரசின் நிலை கடினமானாலும் அதனை வெல்வதற்கு சர்வதேச நாடுகளிடம் கடும் பிரயத்தனம் செய்கிறது என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத் தொடருக்காய் ஜெனிவாவில் அமைக்கப்பட்ட லங்காசிறி வானொலியின் விசேட கலையகத்தில் வழங்கிய செவ்வியில் சட்டத்தரணியும் கனடியத் தமிழர் பேரவையினுடைய சட்ட ஆலோசகருமான கரி ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

http://www.tamilwin.com/show-RUmsyDRcLWip4.html


தமிழ் மக்களுக்கு ஐநா தீர்மானத்தால் பலன் கிடையாது!- கஜேந்திரகுமார்
[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 04:24.50 PM GMT ] [ பி.பி.சி ]
ஐநா மனித உரிமைக் கவுன்ஸிலில் இலங்கை குறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசுக்கு எதிரான ஒரு தீர்மானமாக அல்லாமல் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான ஒரு தீர்மானமாகவே தாம் கருதுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.

இந்தத் தீர்மானம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்தாலும் அதனால் இலங்கை தமிழ் மக்களுக்கு பெரிதாக எந்த விதமான பலனும் கிடைக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தமிழோசைக்கு செவ்வி ஒன்றை வழங்கிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள், இருந்த போதிலும் அந்த தீர்மானத்தின்படி ஒரு விசாரணை ஒன்று இலங்கையில் நடக்குமானால், அதில் மக்கள் கலந்து கொள்வதை தாம் எதிர்க்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்கப் பிரேரணையால் தமிழ் மக்களுக்கு பயனில்லை!- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  (LANKASRI.fm)
அமெரிக்கப் பிரேரணை தமிழ் மக்களின் நலன்களை முற்று முழுதாக பிரதி பலிக்காமை எமக்கு ஏமாற்றம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இந்தத் தீர்மானங்களில் சில மாற்றங்கள் இடம் பெற்றது அதனால் தமிழ் மக்களுக்கு பலன் எதவும் இல்லை என ஜெனிவாவில் அமைந்துள்ள லங்காசிறி வானொலியின் விசேட செய்தியாளரிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyDRcLWip3.html
ஜெனிவா தீர்மானத்துக்கு இட்டுச் சென்ற இலங்கைப் போர்! - ஐநாவிலிருந்து 7 பேர் கொண்ட குழு விசாரணைக்கு வரும்!
[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 03:04.54 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கைப் போர் 25 வருடங்கள் தொடர்ந்த ஒன்று. அதன் இறுதி மாதங்களில் நாற்பதினாயிரம் பேர் வரை மக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டிருந்தது.
அந்தப் போரில் சம்பந்தப்பட்ட இலங்கை அரசாங்கப் படைகள் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினரும் செய்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்குமாறு ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு இப்போது தீர்மானம் கொண்டு வந்திருக்கிறது.
சர்வதேச மட்டத்திலான எந்தவொரு விசாரணையும் தமது நல்லிணக்க நடவடிக்கைகளை பாதிக்கும் என்று இலங்கை அரசாங்கம் கூறுகிறது.
நீண்ட இலங்கைப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுத் தீர்மானம் தீர்வு தருமா?
ஐ.நா.விலிருந்து 7 பேரைக் கொண்ட குழு விசாரணைக்கு இலங்கை வரும் - பயங்கரம் என்கிறது ஐ.தே.க.
ஜெனிவாவில் இலங்கை அரசிற்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறான சர்வதேசத்தின் கெடுபிடிகளுக்கு அரசாங்கமே மூல காரணமாகும்.
நாங்கள் பல தடவைகள் புத்தி சொல்லியும் அவற்றை கண்டு கொள்ளாததன் பயனாக இத்தகையதொரு நிலைமை ஏற்பட்டுள்ளது
இனிமேலாவது சர்வதேசத்துடன் முரண்படாமல் புத்திசாலித்தனமாக அரசு நடந்து கொள்ள வேண்டும் என்று ஐ.தே.க.வின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
ஜெனிவாவில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதன் பிற்பாடு ஏழு பேரை கொண்டு குழு இலங்கைக்கு வருகை தந்து விசாரணையொன்றை மேற்கொள்ளும் இச்செயற்பாடானது மிகவும் பயங்கரமானது.
அரசாங்கமானது உள்ளக விசாரணைகளை உரியவாறு மேற்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்தியிருந்தால் இந்நிலைமை ஏற்பட்டிருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நேற்று இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டு குறித்த தீர்மானம் சர்வதேச விசாரணையொன்றை வேண்டி நிற்கிறது.
இலங்கை மீது சர்வதேசம் இவ்வாறு முரட்டுத்தனமாக நடந்து கொள்வதற்கு அரசாங்கமே மூல காரணமாகும்.
http://www.tamilwin.com/show-RUmsyDRcLWip2.html

Geen opmerkingen:

Een reactie posten