தமிழக மீனவர்களின் விவகாரம் மற்றும் ஜெனீவா பிரேரணை தொடர்பில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும்ää ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவும் ஏற்கனவே மியன்மாரில் வைத்து சந்தித்துக் கொண்ட போது இணக்கப்பாடு ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்க தரப்பு தகவல்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் தமிழகத்தின் முக்கியமான கட்சிகள் எவையும் காங்கிரஸடன் எதிர்வரும் தேர்தலுக்காக கூட்டிணையவில்லை. அத்துடன் தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் பிரச்சினையை காட்டிசிலும் தமிழக மீனவர்களின் பிரச்சினை விடயம் முக்கியமானதாக காணப்படுகிறது.
எனவே இந்த பிரச்சினையை தீர்த்து வைப்பதன் மூலம் தமிழக வாக்குகளை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும் என்று இந்திய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில் தமிழக மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க உதவினால் ஜெனீவா மாநாட்டில் இந்தியா இலங்கைக்கு சார்பாக செயற்படும் என்று மன்மோகன் சிங் ஜனாதிபதி மகிந்தவிடம் உறுதியளித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனடிப்படையிலேயே அண்மைக்கால நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
Geen opmerkingen:
Een reactie posten