தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 16 april 2014

இலங்கை செல்லும் பயணிகளுக்கு அவுஸ்திரேலியாவும் எச்சரிக்கை!!!

கனடாவின் நிதியுதவி நிறுத்தம்: கவலையில் கமலேஷ் சர்மா
[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 03:17.28 AM GMT ]
இலங்கையின் மனித உரிமைகள் நிலையைக் காரணம் காட்டி கொமன்வெல்த் அமைப்புக்கான நிதியுதவியை கனடா நிறுத்தியமை குறித்து அவ்வமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளார்.
கொமன்வெல்த் அமைப்புக்கு இலங்கை தலைமை தாங்கும் அடுத்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில், தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கொமன்வெல்த் நிதியத்துக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவதாக கனடா அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
இந்த பரஸ்பர மற்றும் தன்னார்வ நிதியம் கொமன்வெல்த் நாடுகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.
தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கொமன்வெல்த் நிதியத்துக்கு கனடா நீண்டகாலமாக பெறுமதிமிக்க உதவிகளை அளித்து வந்துள்ளது என்பதையும் கமலேஷ் சர்மா நினைவுபடுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESaLXkq1.html
ஞானசார தேரரை பொது வேட்பாளராக நிறுத்தும் பிரசாரம் ஆரம்பம்
[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 08:55.19 AM GMT ]
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பொது வேட்பாளராக நிறுவதற்கான பிரசாரம் சமூக வலைத்தளம் ஒன்றின் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக பல பேஸ்புக் வலைத்தள கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யார் இந்த கணக்குகளை ஆரம்பித்துள்ளனர் என்பது குறித்து அடையாளங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.
எனினும் இந்த சமூக வலைத்தள பிரசாரத்திற்கும் ஞானசார தேரருக்கும் எந்த தொடர்பும் இல்லை என பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடம் எவ்விதமான எண்ணத்தையும் ஞானசார தேரர் கொண்டிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESaLXkr6.html
இலங்கை செல்லும் பயணிகளுக்கு அவுஸ்திரேலியாவும் எச்சரிக்கை
[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 08:46.18 AM GMT ]
பிரித்தானியாவை தொடர்ந்து அவுஸ்திரேலியாவும் இலங்கைக்கு பயணம் செய்யும் தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு விடுத்துள்ளது.
இலங்கையில் பாதுகாப்பு நிலைமைகள் மோசமாக இருப்பதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள பயண எச்சரிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பாதுகாப்பு நிலைமைகள் மோசமாக இருப்பதால் அங்கு செல்லும் தமது பிரஜைகள் கவனமாக எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என அவுஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் இடம்பெறும் தாக்குதல் சம்பவங்களில் அவுஸ்திரேலிய பிரஜைகள் சிக்கி விடக் கூடாது.
இலங்கையில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் அவுஸ்திரேலிய பிரஜைகள் கலந்துகொள்ளக் கூடாது.
இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் மற்றும் போராட்டங்கள் நடைபெறலாம் எனவும் அவற்றை கலைக்க கண்ணீர்ப் புகை குண்டு தாக்குதல்களை நடத்துமாறு இலங்கை அரசாங்கம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த போராட்டங்களில் கலவரங்கள் வெடிக்கலாம் என்பதால், அவை நடைபெறும் பிரதேசங்களுக்கு தமது பிரஜைகளை செல்ல வேண்டாம் எனவும் அவுஸ்திரேலியா கேட்டுக்கொண்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyESaLXkr5.html

Geen opmerkingen:

Een reactie posten