தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 15 april 2014

இலங்கை இறுதி யுத்தத்தில் இந்தியப் படைக்கும் காயம்!

வடமாரட்சி கரணவாயில் இளம்தலைமுறையின் கட்டுமிரண்டித்தனம்

வாள்வெட்டிற்கு இலக்காகி தொல்புரம் கரணவாய் தெற்கு கரணவாய் பகுதியைச் சேர்ந்தஇந்திரன் நிமல்சன்   (வயது 21)  ஆகிய நபரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர். நேற்றிரவு 9.00 மணயளவில் முதலிக்குலி கரணவாய் தெற்கு கரவெட்டியில் அமைந்துள்ள கிருஸ்ணா விளையாட்டுக் கழகத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மைதானத்தில் விளையாடி விட்டு ஒய்வு எடுக்கும் போது பாட்டுப் போட்டு கேட்டுக் கொண்டிருந்ததாகவும் வாள்வெட்டுக்குள்ளானவர் அதை குறைத்த தாகவும் வெட்டியவா் கூட்டியதாகவும் இதனால் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் கோபமடைந்த சிவநேசன் என்பவரே இவ்வாறு வெட்டியுள்ளார். இந்த வாள் வெட்டுச் சம்பவம் தொடர்பாக நெல்லியடி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


vvv
http://www.jvpnews.com/srilanka/65703.html

இலங்கை இறுதி யுத்தத்தில் இந்தியப் படைக்கும் காயம்

2009ம் ஆண்டில் இலங்கைப் படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் போது, இந்திய படையினர் பங்கேற்றனர் எனக் குறிப்பிடப்படுகிறது. இந்திய படையினர் இலங்கை யுத்தத்தில் பங்கேற்றதாக இந்திய நிதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இலங்கை யுத்தத்தில் பங்கேற்ற இந்திய படையினருக்கு சிக்கியர் ஒருவர் தலைமை தாங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய படையினர் யுத்தத்தில் பங்கேற்றமைக்கான சாட்சியங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் அல்லது ஜனாதிபதியின் அனுமதியின்றி இந்திய படையினரை வேறும் நாடுகளின் யுத்தத்தில் ஈடுபடுத்துவது சட்டவிரோதமானது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத யுத்தத்தின் பின்னணியில் செயற்பட்டிருந்த அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த சட்டத்தரணியான ராம் சங்கர் என்பவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் சட்டவிரோதமான முறையில் இலங்கை யுத்தத்தில் ஈடுபடுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய படையினர் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பங்கேற்றதாக சில புகலிடக் கோரிக்கையாளர்கள் தம்மிடம் குறிப்பிட்டதாகவும் பல தடவைகள் தாம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 http://www.jvpnews.com/srilanka/65714.html

Geen opmerkingen:

Een reactie posten