இலங்கை அகதிகளை அடைத்து கன்னியாக்குமரி வருகிறார் சோனியா..
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி வருகையை முன்னிட்டு பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ஈழ அகதிகள் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாள்களும் ஊரை விட்டு வெளியே வர போலீஸார் தடை விதித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் விதமாக புதன்கிழமை (ஏப். 16) காலை 11.30 மணிக்கு கன்னியாகுமரி வருகை தருகிறார்.
இதையடுத்து கன்னியாகுமரி நகரம் முழுவதும் போலீஸார் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
கன்னியாகுமரிக்கு வரும் உள்ளூர் மற்றும் சுற்றுலா வாகனங்கள் விவேகானந்தபுரம் மற்றும் மகாதானபுரம் சந்திப்புகளில் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. இது தவிர அனைத்து தனியார் தங்கும் விடுதிகளிலும் தங்கியிருப்போர் பட்டியல் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் சந்தேகப்படும்படியான நபர்களுக்கு அறைகள் கொடுக்க வேண்டாம் என தங்கும் விடுதியின் மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளம் மற்றும் பொதுக்கூட்ட மைதானத்தில் பாதுகாப்பு கருதி துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் குமரியில் முகாமிட்டுள்ளனர்.
ஹெல உறுமய அதிரடி! அமைச்சர் பதியூதீனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது.
வில்பத்து வனவிலங்கு சரணாலய பகுதியில் முஸ்லிம்கள் சட்டவிரோதமான முறையில் குடியேற்றப்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு எதிராக வழக்குத் தொடர்வான ஆரம்ப கட்டப் பணிகள் பூர்த்தியாகியுள்ளதென தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மக்கள் சட்ட ரீதியாக வடக்கில் மீள் குடியேற்றப்பட வேண்டுமே தவிர, வில்பத்து சரணாலயத்தில் குடியேற்றப்படக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சி, இன மத பேதங்களைக் களைந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
சட்டம் அனைவருக்கும் சமமான முறையில் அமுல்படுத்தப்பட வேண்டுனெம அவர் வலியுறுத்தியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/65649.html
Geen opmerkingen:
Een reactie posten