KPக்கு எதிரான சர்வதேச குற்றச்சாட்டுக்களில் திருத்தம்
சர்வதேச காவல்துறையினரான இன்டர்போலினால் குமரன் பத்மநாதனுக்கு எதிராக பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குமரன் பத்மநாதனுக்கு எதிராக முன்னர் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. பயங்கரவாதம், வெடிபொருள் மற்றும் ஆயுத பயன்பாடு தொடர்பில் தேடப்பட்டு வரும் நபராக குமரன் பத்மநாதனின் பெயர் இணைக்கப்பட்டிருந்தது.
எனினும், தற்போது அந்தக் குற்றச்சாட்டுகு;களில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்திய வெடிபொருள் சட்டத்தை மீறியமை மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குமரன் பத்மநாதன் தேடப்பட்டு வருவதாக இன்டர்போல் பிடிவிராந்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குடனும் குமரன் பத்மநாதனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழருக்கான உரிமைகள் அதிகாரங்களை வழங்க சிறந்த வழி சுயாட்சி: சம்பந்தன் MP
தமிழர்களுக்குச் சுயாட்சி அளவுக்கான அதிகாரத்தைக் கொடுக்கக்கூடியதான அமைப்பு ஒன்றை உருவாக்குங்கள் என்று இலங்கை அரசிடமும் ஏனைய அரசியல் கட்சிகளிடமும் தேசிய சமாதானப் பேரவை விடுத்துள்ள கோரிக்கையை வரவேற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்தக் கோரிக்கையை இலங்கை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களுக்கு சுயாட்சியை வழங்குவதன் மூலமே நாட்டில் நிரந்தர சமாதானத்தை அமைதியை ஏற்படுத்த முடியும். தமிழர் பிரச்சினை இன்று சர்வதேச மயப்படுத்தப்பட் டுள்ள நிலையில் சர்வதேச மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசுடன் பேச்சு நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்குச் சுயாட்சி அளவுக்கான அதிகாரத்தைக் கொடுக்கக்கூடியதான அமைப்பு ஒன்றை உருவாக்குங்கள் என்று இலங்கை அரசிடமும் ஏனைய அரசியல் கட்சிகளிடமும் தேசிய சமாதானப் பேரவை நேற்றுமுன்தினம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சை மீள ஆரம்பிக்குமாறும் அது இலங்கை அரசைக் கோரியுள்ளது. அண்மையில் நெடுங்கேணியில் வைத்து மூன்று தமிழ் இளைஞர்கள் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னணியில் உருவாகியிருக்கும் நிலைமையை அடுத்து தேசிய சமாதானப் பேரவை அவசரமாக இந்தக் கோரிக்கைகளை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்த்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
நாட்டில் அசாதாரண நிலைகள் ஏற்படுகின்றபோது அவற்றுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் நோக்கில் தேசிய சமாதானப் பேரவை இலங்கை அரசுக்கும் ஏனைய தரப்பினருக்கும் பல அறிவுரைகளைக் கூறி வருகின்றது. அந்தவகையில் தற்போது அந்தப் பேரவை விடுத்துள்ள அவசர வேண்டுகோளை நாம் மனதார வரவேற்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.
நாட்டின் முன்னேற்றம் கருதியே இந்த வேண்டுகோளை சமாதானப் பேரவை விடுத்துள்ளது. இந்தப் பேரவை தமது அறிக்கையில்இ வடக்கில் தற்போது நடைபெற்று வரும் உண்மைச் சம்பவங்களை அம்பலப்படுத்தியுள்ளது. ஐ.நா. விசாரணை ஆணைக்குழுவுக்கு ஒத்துழைக்கும் வகையில் உள்ளூரில் விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கேற்றவாறு தமது செயற்பாடுகளை இலங்கை அரசு முன்னெடுக்கவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten