தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 18 april 2014

கிராமர்-டோஸ்க் விமானப்படை தளத்துக்குள் ரஷ்யா !



உக்கிரேன் நாட்டில் உள்ள கிரீமியா என்னும் மாநிலம், சில வாரங்களுக்கு முன்னர் தன்னிச்சையாக ஒரு வாக்கெடுப்பை நடத்தி தாம் உக்கிரேன் நாட்டில் இருந்து பிரிவதாக அறிவித்தது. இதன் பின்னணியில் ரஷ்யா இருந்தது யாவரும் அறிந்த விடையம். அதனை தொடர்ந்து ரஷ்ய படைகள் கிரீமியாவுக்குள் சென்று, அந்த மாநிலத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இதனையடுத்து, அமெரிக்கா பெரும் கண்டனத்தை வெளியிட, பதிலுக்கு ரஷ்யா இது எமது பிராந்தியப் பிரச்சனை அமெரிக்கா இதில் தலையிட்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கடுமையாக எச்சரித்தது. இதன் காரணமாக அமெரிக்கா பல நவீன ஆயுதங்களை உடனடியாக உக்கிரேனுக்கு வழங்கியுள்ளது. இன் நிலையில் உக்கிரேன் நாட்டில் உள்ள கிரீமியா மாநிலத்தை விட மேலதிக நிலப்பரப்புகளையும், தளங்களையும் கைப்பற்ற ரஷ்யா திட்டம் தீட்டி செயல்படுத்தியும் வருகிறது.

இதேவேளை கிழக்கு உக்ரேனில் உள்ள கிராமர்டோஸ்க் விமானப்படை தளத்துக்குள் ரஷ்யப் படைகள் செவ்வாய் அன்று ஊடுருவியது. ஆனால் அவர்களோடு சண்டையிடாமல் அங்கிருந்து காலிசெய்யுமாறு உக்கிரேன் படைகளுக்கு அதன் தலைமை கட்டளையிட்டதாக கூறப்படுகிறது. இன் நிலையில் கிழக்கு உக்ரேனில் உள்ள கிராமர்டோஸ்க் விமானப்படை தளத்துக்குள் (செவ்வாய்க்கிழமை) மாலை ஏராளமான வெடிச் சத்தங்கள் கேட்டதாக தகவல் உள்ளது.
இந்த விமானப்படை தளம், கடந்த சில தினங்களுக்கு முன், ரஷ்ய ஆதரவு போராட்டக்காரர்களால் (அதன் அர்த்தம், பின்னணியில் ரஷ்ய ராணுவம் உண்டு) உக்ரேன் விமானப்படையிடம் இருந்து கைப்பற்றப்பட்டிருந்தது. அப்போது உக்ரேன் விமானப்படை, பெரிதாக எதிர்ப்பு காட்டாமல் தளத்தை காலி செய்திருந்தது. (உக்ரேன் விமானப்படை வீரர்கள், கிராமர்டோஸ்க் விமானப்படை தளத்தை விட்டு வெளியேறுவதற்குமுன் எடுக்கப்பட்ட போட்டோவை மேலே பார்க்கவும். தளத்தை காலி செய்வதற்கு, விமானப்படை தலைமையக உத்தரவுக்காக அவர்கள் காத்திருந்தபோது எடுக்கப்பட்ட போட்டோ அது.)

கிராமர்டோஸ்க் விமானப்படை தளத்துக்குள் நேற்று மாலை கேட்ட வெடிச் சத்தங்களுக்கு என்ன காரணம் என உக்ரேன் செய்தி ஏஜென்சிகள் உறுதி செய்யப்பட்ட தகவல் எதையும் இதுவரை வெளியிடவில்லை.ஆனால், சம்பவம் நடந்த நேரத்தில், இந்த விமானப்படை தளத்துக்கு மேலாக சில போர் விமானங்கள் பறந்து கொண்டிருந்தன. அவை, உக்ரேன் விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் என தெரியவருகிறது. இப்போது, உக்ரேன் விமானப்படையால் கிராமர்டோஸ்க் விமானப்படைத்தளம் மீள கைப்பற்றப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்களில் தகவல் உள்ளது. உக்ரேனில், ரஷ்ய ஆதரவு போராட்டக்காரர்களால் ராணுவ தளங்கள் கைப்பற்றப்பட்டபோது ரஷ்யா, “அதற்கும் எமக்கும் தொடர்பே கிடையாது” என்று கூறிவந்தது. ஒருவேளை கிராமர்டோஸ்க் விமானப்படை தளம் உக்ரேனால் மீண்டும் கைப்பற்றப்பட்டிருந்தால், அதற்கு ரஷ்யாவின் ரியாக்ஷன் எப்படி இருக்க போகிறதோ!

வெளியுலகிற்கு தெரியாத பனிப்போர் ஒன்று உக்கிரேனில் நடந்து வருகிறது. இதுவே உண்மை நிலை ஆகும்.

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6697

Geen opmerkingen:

Een reactie posten