தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 23 april 2014

புலி ஆதரவு அமைப்புகள் தடை! அரசாங்கம் நாளை இராஜதந்திரிகளுக்கு விளக்கம்!

அவுஸ்திரேலியா முதலாவது படகை நாளை இலங்கையிடம் கையளிக்கும்- இலங்கை- ஆஸி உறவில் மேம்பாடு
[ புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014, 01:15.12 AM GMT ]
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்கு இரண்டு படகுகளை வழங்குவதாக உறுதியளித்த அவுஸ்திரேலிய அரசாங்கம், நாளை வியாழக்கிழமை இலங்கைக்கு முதலாவது படகை வழங்கவுள்ளது.
சட்டவிரோத அகதிக் கோரிக்கையாளர்களின் கடல் வழிப் பயணங்களை தடுக்கும் நோக்கில் இந்தப் படகு வழங்கப்பட உள்ளது.
அகதிக் கோரிக்கையாளர்கள் கடல் வழியாக அவுஸ்திரேலியா நோக்கிப் பயணிப்பதனை கண்காணிப்பதற்கு இரண்டு படகுகளை வழங்குவதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
இதன் ஓர் கட்டமாக முதலாவது படகை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கவுள்ளது.
படகு கொழும்புத் துறைமுகத்தைச சென்றடைந்தவுடன் படகு இலங்கைக் கடற்படையினரிடம் நாளை வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட உள்ளது.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்கு இந்த படகு பயன்படுத்தப்பட உள்ளது.
இலங்கை- அவுஸ்திரேலிய உறவில் மேம்பாடு
ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முயற்சிகளின் அடிப்படையில் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவு மேலும் மேம்படும் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அந்த நாட்டின் குடிவரத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஆட்கடத்தல் விடயத்தில் இலங்கையும் அவுஸ்திரேலியாவும் இணைந்து செயற்படும் போது சட்டவிரோதமான பல குற்றங்களை தடுக்கக்கூடியதாக இருக்கும் என்று மொரிசன் அவுஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் இலங்கையர்களின் தொகை 3456 இருந்த நிலையில் தற்போது அது 4987 ஆக 74 வீதத்தால் உயர்ந்துள்ளது.
இது சட்டரீதியாக தொழில் மற்றும் குடும்பங்களுடன் இணைவு ஆகிய அடிப்படையில் ஏற்பட்ட உயர்வாகும் என்று மொரிசன் குறிப்பிட்டார்.
இதேவேளை அவுஸ்திரேலியாவுக்கு வந்த 79 சட்டவிரோத படகுகள் திருப்பியனுப்பப்பட்டதாகவும் மொரிசன் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyERXLXhu4.html
தமிழ் கட்சிகள் இந்தியாவிடம் முறையிடுவதை நிறுத்த வேண்டும்: அமைச்சர் டியூ குணசேகர
[ புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014, 03:13.58 AM GMT ]
இலங்கையின் தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்தியாவுக்கு முறைப்பாடு செய்வதால் பயன் ஏதும் இல்லை என்று அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் நாட்டில் சுமார் 10 தமிழ்க் கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதேபோல முஸ்லிம் கட்சிகளும் ஆரம்பிக்கப்பட்டன.
எனினும் அந்தக்கட்சிகள் நாட்டின் பிரதான அரசியலில் காத்திரமான பங்கை வகிக்க தவறிவிட்டன. சுதந்திரம் அடைந்த பின்னர் நாட்டில் ஒற்றுமைக்கான காரணிகள் மேம்படுத்தப்படவில்லை.
தேசிய ஒற்றுமை என்பது உருவாகாத காரணத்தினால்தான் நாட்டின் பொருளாதாரம் சீரற்றிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தமிழ்க் கட்சிகள், இலங்கையின் உள்ளக பிரச்சினைகளை உள்ளூரிலேயே தீர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இதனைவிடுத்து இந்தியாவிடம் முறையிடும் அரசியலை தமிழ்க் கட்சிகள் கைவிட வேண்டும்.
ஏற்கனவே பண்டாரநாயக்க- செல்வநாயகம், டட்லி- செல்வநாயகம் மற்றும் ஜே.ஆர் - ராஜீவ் உடன்படிக்கைகள் யாவும் செயலிழந்து போனமைக்கு அந்த உடன்படிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படாமையே காரணம் என்று அமைச்சர் கூறினார்.
சுதந்திரத்துக்கு முன்னர் இலங்கையிலர் தமிழ் காங்கிரஸ் மாத்திரமே செயற்பட்டது. எனினும் இன்று 10 தமிழ்க் கட்சிகள் இயங்குகின்றன.
எனினும் அவற்றினால் உரிய முனைப்புக்களை உள்ளூரில் மேற்கொள்ள முடியாமை கவலைக்குரியது என்று அமைச்சர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyERXLXhvz.html
புலி ஆதரவு அமைப்புகள் தடை! அரசாங்கம் நாளை இராஜதந்திரிகளுக்கு விளக்கம்
[ புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014, 01:27.39 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு புலம்பெயர் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டமை குறித்து அரசாங்கம் நாளை கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுக்கு விளக்கம் அளிக்கவுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த விளக்கத்தை அளிக்க உள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பதினாறு அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த தடை தொடர்பில் நாட்டின் சகல இராஜதந்திரிகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
புலிகள் அமைப்பை மீளவும் இயங்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள 40 நபர்கள் தொடர்பிலும் அமைச்சர் பீரிஸ் விளக்கம் அளிக்க உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyERXLXhu5.html

Geen opmerkingen:

Een reactie posten