[ ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014, 08:47.21 AM GMT ]
பொய்யான பிரசாரங்களையும் வதந்திகளையும் பரப்பி இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்த சில குழுக்கள் முயற்சித்து வருகின்றன.
இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளில் தென் ஆபிரிக்க அரசாங்கம் பரந்தளவிலான திட்டங்களை முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் வாழும் சகல மக்களின் வாழ்க்கையையும் சுபிட்சமாக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சேலை ஊடாக அம்பாறை இணைக்கும் மண்முனை பாலத்தை திறந்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய ஜனாதிபதி,
நாட்டில் சகல பிள்ளைகளும் நாட்டுக்குள் சுதந்திரமாக வாழும் உரிமையை ஏற்படுத்திக் கொடுக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும்.
நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள தேசிய ஐக்கியம் மற்றும் மத நல்லிணக்கத்தை அழிக்க வெளிநாட்டு சக்திகள் செயற்பட்டு வரும் இவ்வாறான சந்தர்ப்பத்தில், நாட்டின் நலன் கருதி செயற்பட வேண்டியது அனைவரதும் பொறுப்பு எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
நல்லிணக்கத்திற்கு பரந்தளவிலான திட்டங்களை முன்னெடுக்கும் தென் ஆபிரிக்கா
[ ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014, 11:46.24 AM GMT ]
தென் ஆபிரிக்காவின் எதிர்கால ஜனாதிபதி எனக் கருதப்படும் சிறில் ராம்போஷாவை, அந்நாட்டு ஜனாதிபதி ஜேகப் ஜூமா இலங்கைக்கான விசேட பிரதிநிதியாக நியமித்தார்.
தென் ஆபிரிக்காவின் செயற்பாடுகளின் முதல் கட்டமாக சிறில் ராம்போஷா அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடத்தும் நோக்கில் ராம்போஷா அடுத்த மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இலங்கையின் நல்லிணக்க நிலைமைகளில் தலையீடு செய்ய கூடிய வகையில், ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் அந்த நாடு கலந்து கொள்ளவில்லை.
தென் ஆபிரிக்கா, நிறவெறி வெள்ளையின் அரசாங்கத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், அந்நாட்டில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்து அதன் செயற்பாடுகளை வெற்றிகரமான முன்னெடுத்திருந்தது.
அதேபோன்ற நல்லிணக்க செயற்பாடுகளை இலங்கையில் மேற்கொள்வதற்கான அழுத்தங்களை தென் ஆபிரிக்க கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயின் தென் ஆபிரிக்கா, இலங்கையில் தலையீடு செய்ய தேசியவாத அமைப்புகள் இடமளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten