தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 16 april 2014

இலங்கை மீது அழுத்தத்துடன் எட் மிலிபான்

பிரான்ஸ் புலிகளை கைது செய்ய இன்ரர் போல் உதவியை நாடிய இலங்கை

இந்த வழக்கு இதுவரை முடிந்தபாடாக இல்லை. அத்தோடு குற்றவாளிகளையும் பிரெஞ்சுப் பொலிசார் இதுவரை கண்டுபிடிக்கவும் இல்லை. பிரான்சில் வாழும் தமிழர்களிடையே துப்பாக்கி கலாச்சாரம் ஓங்கியுள்ளதாகவும், முன் நாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரே அல்ஜீரியா நாட்டுக்குச் சென்று , கைத்துப்பாக்கிகளை வாங்கிக்கொண்டு பிரான்சுக்குள் நுளைவதாகவும் இலங்கை ஒரு அறிக்கை ஒன்றை தயாரித்து சர்வதேச பொலிசாரிடம் கையளித்துள்ளது என கொழும்பில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
புலம்பெயர் நாடுகளில் , கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், சுவிஸ், மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் அதிகம் அரசியல் காய்நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக ஸ்ரீலங்கா அரசுக்கு பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுத்து நிறுத்தவே தற்போது இன்ரர் போல் என்னும் சர்வதேச பொலிசாரை ஏவி தமிழர்களை அடக்க நினைக்கிறது இலங்கை அரசு.
http://www.jvpnews.com/srilanka/65791.html

இலங்கை மீது அழுத்தத்துடன் எட் மிலிபான்

பிரித்தானிய எதிர்கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் சுயாதீமான சர்வதேச விசாரணையை நடத்த தொழிற்கட்சி ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.
இதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிiவேற்றப்பட்ட பிரேரணையை தாம் வரவேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணைகள் இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் சிறிலங்காவின் அடிப்படை மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியமான படிகளாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/65803.html

Geen opmerkingen:

Een reactie posten