தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 13 april 2014

வெளிநாட்டு தமிழர் அமைப்புக்களுக்கு வரையறை – நியோமல் பெரேரா

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தடை முட்டாள் முடிவு: ராஜீவ விஜேசிங்க

தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நெருக்குதல்களுக்கு உள்ளாக்க முயற்சிப்பது உசிதமான நடவடிக்கையாக அமையாது என அவர் தெரிவித்துள்ளார்.புலம்பெயர் தமிழ் சமூகம் தொடர்பில் முரண்பட்ட கொள்கைகளை பின்பற்றுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் புத்திசாதூரியமான தீர்மானமாகாது என ஆளும் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்வதனால் ஏற்படக் கூடிய எதிர்விளைவுகளை கருத்திற் கொள்ளாது அரசாங்கம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எமது நாட்டின் தீர்மானம் நிறைவேற்றும் அதிகாரமுடையோரிடம், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பிலான ஆர்வம் வெகு வரையறுக்கப்பட்டுள்ள அளவிலேயே காணப்படுவதாக தாம் உணர்வதாகத் தெரிவித்துள்ளார்.புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சாதகமான முறையில் செயற்பட்ட சந்தர்ப்பங்களை நாம் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/65491.html

வெளிநாட்டு தமிழர் அமைப்புக்களுக்கு வரையறை – நியோமல் பெரேரா

குறித்த அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சித்தால் விமான நிலையத்திலேயே வைத்து கைது செய்யப்படுவர் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தடை செய்யப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பயங்கரவாத நிதி சேகரித்தல் மற்றும் அரச விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
அமைப்புக்களைச் சேர்ந்தவர்களின் செயற்பாடுகள் உன்னிப்பாக அவதானிக்;கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.வெளிநாட்டு தூதரங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/65494.html

Geen opmerkingen:

Een reactie posten