தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 29 april 2014

இலங்கையின் தடைக்கு எதிராக, கனடாவில் சூடுபிடித்த எதிர்கட்சிகளின் வாதம்…

இலங்கை அரசாங்கம் புலம்பெயர் அமைப்புகளை தடைசெய்தமைக்கு பதில் நடவடிக்கை எடுக்குமாறு கனடாவின் வெளிவிவகார அமைச்சரான ஜோன் பயர்ட்டை அந்த நாட்டின் எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி கோரியிருக்கின்றது.
அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான போல் டிவர் மற்றும் ராதிகா சிற்சபேசன் ஆகியோர் இவ்விடயம் தொடர்பாக கனேடிய வெளிவிவகார அமைச்சருக்குக் கடிதம் ஒன்றை வரைந்துள்ளனர்.
இந்தத் தடை கனடாவில் செயற்படும் சில அமைப்புகள் இலங்கையில் சில நிறுவனங்களுக்கு உதவி, அவற்றுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுகின்றமையைப் பாதித்துள்ளது என்றும், களத்தில் பணியாற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் சிவில் யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வரும் அமைப்புகளை விசேடமாக இலக்கு வைத்தே இந்தத் தடை அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
அண்மையில் ஜெனீவாவில் நடைபெற்று முடிந்த ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் கூட்டத்தில் இலங்கை தொடர்பான தீர்மானம் எடுப்பதற்காகக் கடுமையாக உழைத்து உதவிய இரு கனேடிய நிறுவனங்களும் இந்தத் தடைப் பட்டியலில் அடக்கப்பட்டுள்ளன.
இந்தத் தடை இலங்கையில் களத்தில் உள்ள ஏனைய அமைப்புகளுடன் இந்த இரு அமைப்புகளும் இணைந்து பணியாற்றுகின்றமையைத் தடுக்கின்றது. அத்தோடு களத்தில் மனித உரிமைகளுக்காகச் செயற்படும் ஆர்வலர்களின் பணியையும் முடக்குகின்றது.
கனடாவில் இந்த அமைப்புகள் தங்கள் இணை அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றுவதையும் நிதி சேகரிப்பதையும் கூட இந்தத் தடை பாதிக்கக்கூடியது. மேலும் இந்தத் தடை கனடா வாசிகள் உட்பட பல தனிநபர்களையும் அடையாளப்படுத்தி குறி வைத்துள்ளது.
இது, கனடா பிரஜைகளின் தனிமைக்கான சுதந்திரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் அத்துமீறல் என நாம் கருதுகின்றோம்.” “இலங்கையின் இந்த நடவடிக்கை ஜனநாயக விரோதமானது; ஏற்றுக் கொள்ள முடியாதது; பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளை சிறுமைப்படுத்துவது. அதனால் கடுமையான வார்த்தைகளினால் அது கண்டிக்கப்பட வேண்டும்.
அத்தகைய கண்டனம் மட்டும் கூடப் போதுமானதல்ல. சர்வதேச சமூகக் கட்டமைப்புகள் தொடர்பாகத் தான் எடுத்த முடிவை மாற்றியமைக்கக் கூடியதான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு தரத்தக்க விதத்தில் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.
மனித உரிமைகள் விசாரணை மற்றும் அதற்கான செயற்பாடுகளை பாதிக்கச் செய்யும் விதத்தில் இலங்கை முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு கனடா எப்படிப் பதிலடி மேற்கொள்ளப் போகின்றது என்பது குறித்து எங்களுக்கு விளக்கம் தாருங்கள்.
விசேடமாக இலங்கையில் மனித உரிமை மீறல், துஷ்பிரயோகங்கள் மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகளுக்குக் காரணமான தனியாட்களை இலக்கு வைக்கும் விதத்தில் தடைகளை விதிக்க கனடா அரசு பரிசீலிக்கின்றதா? அல்லது வெளிவிவகாரத்துக்கான நிலையியல் குழு 2009 இல் பரிந்துரை செய்த மாதிரி நிதி மற்றும் இராஜதந்திரத் தடைகளை விதிக்க விரும்புகிறதா?
அத்தோடு கிரிமினல் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் எனக் கனடா பிரஜைகளுக்கு எதிராகப் பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டமை தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்க உள்ளீர்கள் என்பதையும் தெரியப்படுத்துங்கள்!
இப்படி அந்தக் கடிதத்தில் இரண்டு எம்.பிக்களும் கனடா அரசைக் கோரியிருக்கின்றனர்.
Rathika-Lette
- See more at: http://www.canadamirror.com/canada/25302.html#sthash.zqfYmj8G.dpuf

Geen opmerkingen:

Een reactie posten