குருநகரில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட கொன்சலிற்றா என்ற இளம் பெண்ணின் மரணச்சடங்கில் கலந்து கொண்ட பொதுமக்கள் அவரின் பூதவுடலை தாங்கிய நிலையில் இன்று ஆயர் இல்லம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்ணின் மரணத்திற்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தமக்கு நீதி வழங்கக் கோரி மறைமாவட்ட ஆயர் இல்லத்தின் முன் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
குருநகர் அடப்பன் வீதியில் வசித்துவந்த ஜெரோமி கொன்சலிற்றா என்ற 22 வயதுடைய இந்த யுவதி குருநகரில் உள்ள மறைக்கல்வி நிலையத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.
இந்நிலையில் அங்கு பணியாற்றும் பாதிரியார் ஒருவர் கொன்சலிற்றாவை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளதுடன், இதனால் அவர் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகி இருந்தார்.
இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என யுவதியின் தாயார் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
குறித்த யுவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்து பாதிரியார் அனுப்பிய குறுஞ் செய்திகளும் ஆபாசப் படங்களும் யுவதியின் கைத்தொலைபேசியில் இருப்பதாக யுவதியின் தாயார் பொலிஸாருக்கு அளித்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுவதி துன்புறுத்தப்பட்டமை சம்பந்தமான ஆதாரங்கள் கிடைத்துள்ள போதும் சம்பவம் தொடர்பில் நேற்றிரவு வரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyESaLXkr7.html
Geen opmerkingen:
Een reactie posten