தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 28 april 2014

கொலை குற்றவாளிகள் 7 பேருக்கு மரண தண்டனை!- நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு


அரசியல்வாதியின் குடும்ப சொத்தாக மாறிய தேயிலைத் தொழிற்சாலை: நடுவீதியில் தேயிலைக் கொழுந்துகள்
[ திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2014, 11:58.13 AM GMT ]
தேயிலைத் தொழிற்சாலையொன்று அரசியல்வாதியொருவரின் குடும்ப சொத்தாக மாற்றப்பட்டுள்ளதுடன், தேயிலைக் கொழுந்துகளும் நடுவீதியில் வீசப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எமது நாட்டின் தேசிய பொருளாதாரத்தின் முதுகு எலும்பாக இருப்பது பெருந்தோட்ட பயிர் உற்பத்தியாகும்.
இந்தவகையில் தேயிலை ஏற்றுமதி மூலம் கடந்தவருடம் ரூபா 1.6 மில்லியன் இலாபமாக கிடைத்தது. இதில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரு ரூபாயேனும் கிடைக்கவில்லை என்பதும் உண்மையாகும்.
ஆனால் தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனிகள் தேயிலை உற்பத்தியில் நட்டம் ஏற்படுகின்றது என கடந்த காலங்களில் கூறினார்கள் இதனையடுத்து பல தோட்டங்களில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளை மூடினார்கள்.
இவ்வாறு மூடப்பட்ட தேயிலை தொழிற்சாலைகளில் நானுஒயா கிளரண்டன் தோட்ட தொழிற்சாலையும் ஒன்றாகும். இது சுமார் 7 வருடமாக இயங்காது இருந்து.
கடந்தவருடம் சுமார் 1 கோடி ரூபா செலவில் புனர்நிர்மானம் செய்யப்பட்டது. அதனையடுத்து சுமார் 6 மாதம் காலம் தேயிலை அரைக்கப்பட்டு தேயிலை தூள் உற்பத்தியும் செய்யப்பட்டது.
இத்தோட்டம் தலவாக்கலை பிளான்டேசன் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது என்பதும் குறிப்பிடதக்கது.
இப்போது இத்தேயிலை தொழிற்சாலை பிரபல்யமான அரசியல்வாதி ஒருவரின் குடும்ப சொத்தாக மாற்றப்பட்டு இதற்கு வெளிமாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்படும் நன்கு தரமான தேயிலை கொழுந்து மட்டும் அரைக்கப்படுவதும் கிளரண்டன் தோட்டத்துக்கு சொத்தமான அவோக்கா, கண்டிதுரை போன்ற தோட்டங்களில் சுமார் 300 தொழிலாளரகள் நாள் ஒன்றுக்கு 3000 கிலோ கிராம் கொழுந்து பறிக்கப்பட்டாலும் இவைகள் இத்தொழிற்சாலைக்கு உள்வாங்கப்படுவதில்லை.
இதனால் இத்தேயிலை கொழுந்து இதே நிறுவனத்திற்கு சொந்தமான சமர்செட் தொழிற்சாலைக்கு தேயிலை தூள் உற்பத்திக்காக அனுப்பப்படுகின்றது.
இப்போது இச்செயற்பாட்டினாலும் பாரிய பிரச்சினைகளும் தோன்றியுள்ளன. அதாவது கிளரன்டன் தோட்ட முகாமையாளரின் சிபாரிசுடனும் சமர்செட் தோட்ட முகாமையாளரின் அனுமதியுடன் இக்கொழுந்து மாற்றீடு செய்யப்படுகின்றது.
ஆனால் அனேகமான நேரங்களில் சமர்செட் தேயிலை தொழிற்சாலை உத்தியோகஸ்தர்களினால் கிளரண்டன் தோட்ட கொழுந்து தரமில்லையென கூறி ஏற்றுக்கொள்வதில்லை.
இதனால் தேயிலை கொழுந்து வீதிகளில் ஆங்காங்கே கொட்டப்படுகின்றது. இச்செயற்பாட்டினால் தோட்டதொழிலாளர்களும், தோட்டஉத்தியோகஸ்தர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
இது தொடர்பாக அவோக்கா தோட்ட நிர்வாகி ஒருவரிடம் கூறுகையில்,
சமீபகாலமாக கிளரண்டன் தோட்டத்தை மீள்கொத்துகை முறையில் (Sub Contractor) வேறொரு தனியார் நிறுவணத்திற்கு விற்பனை செய்ய முயற்சி எடுக்கின்றனர். இதனால் சுமார் மூன்று மாதத்திற்கு முன்பு கிளரண்டன் என்ற முகவரியை கொண்ட பெயர்பலகையை நிர்வாகம் அகற்றிவிட்டு பொதுமக்களுக்கு வேறு தெளிவில்லாத காரணத்தை கூறினர்.
இப்போது எமக்கென்று கிளரன்டன் தோட்டத்துக்கான தொழிற்சாலையையும் இல்லாது செய்துள்ளனர். இதேபோல் கொழுந்து தரமில்லை என கூறுவதும் தோட்டம் நட்டத்தில் இயங்குகின்றது எனவும் கூறப்படும் விடயமானது தலவாக்கலை பிளான்டேசன் நிறுவனத்தினால் கிளரண்டன் தோட்டத்தை மூடி விட எத்தனிக்கின்றனர் என கூறினார்.
மேலும் தோட்ட தொழிலாளர்கள் இது தொடர்பாக கருத்துக் கூறுகையில்,
நாங்கள் கணக்கபிள்ளை, கங்கானி கூறுவதுபோல் ஒவ்வொரு நாளும் தரமான கொழுந்தை பறிக்கின்றோம். அதனை நாங்களே நிறுத்து பாதுகாப்பான முறையில் பொதி செய்து அனுப்புகின்றோம். இருந்தாலும் ஏன் எங்கள் கொழுந்தை ஏற்றுக் கொள்வதில்லை என்று தெரிவதில்லை.
இதேபோல் எங்கள் தோட்டத்திற்கென்று தனியான தொழிற்சாலை, வைத்தியசாலை, அம்புலன்ஸ் வண்டி, நூலகம், ஆலயம் போன்ற அடிப்படை தேவைகள் ஒன்றும் கிடையாது.
நாங்கள் ஒவ்வொரு நாளும் வேறு தோட்டத்தில் உதவியை எதிர்பார்த்தே வாழ்கின்றோம். இப்பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வுவேண்டுமென பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
கொலை குற்றவாளிகள் 7 பேருக்கு மரண தண்டனை!- நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு
[ திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2014, 11:48.01 AM GMT ]
நுவரெலியா மாவட்டம், வலப்பனை, பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேருக்கு இன்று திங்கட்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
1994 ம் ஆண்டு பொதுத் தேர்தல் காலத்தில் இடம்பெற்ற இந்த கொலை சம்பவம் தொடர்பில் 09 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்ததுடன், வழக்கு விசாரணைகள் மிக நீண்டகாலமாக நடந்து வந்தது.
மேற்படி வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் வழக்கு விசாரணை நடத்தப்பட்ட காலப் பகுதியில் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், எஞ்சிய 7 பேருக்கு எதிராக நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க குற்றவாளிகளுக்கு எதிராக இந்த மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 5 பேர் இரண்டு குடும்பங்களை சேர்ந்த சகோதரர்கள் என தெரியவருகிறது

Geen opmerkingen:

Een reactie posten