தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 27 april 2014

மட்டக்களப்பில் கருணாவின் பதாகை கிழித்துச் சேதமாக்கப்பட்டது !


மட்டக்களப்பு, மண்முனைப்பால நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பிரதியமைச்சர் வி.முரளிதரனின் (கருணா)  பதாகை இனந்தெரியாதவர்களினால் கிழித்துச் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மண்முனைப் பாலம் கடந்த 19ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவினால் பொது மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்தப் புதிய மண்முனைப் பால நுழைவாயிலில் பிரமாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரனின் (கருணா) பதாகையே இவ்வாறு  கிழித்து சேதமாக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதாதையில் 'சரித்திர நாயகனே, சமாதான கர்த்தாவே, தொடரட்டும் உன் அரசியல் பணி'  எனக் குறிப்பிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கருணாவுக்கு கைலாகு கொடுக்கும் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இதில் கருணாவின் முகம் உள்ள பகுதியே இனந்தெரியாதவர்களால் கிழித்துச் சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten