தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 30 april 2014

சிங்களத்தின் ‘புலியுயிர்ப்பு’க் கற்பனையில் ‘அதிர்வு’க் கோட்டை கட்டும் கட்டாக்காலி இணையம்! - வேங்கைமார்பன்





தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உயிரூட்டம் அளிக்க முற்பட்டதாகக் குற்றம் சுமத்தி தெய்வீகன், கோபி, அப்பன் என்ற மூன்று இளைஞர்களை மணலாறு வெடிவைத்தகல் பகுதியில் வைத்துக் கடந்த 11ஆம் நாளன்று சிங்களப் படையினர் சுட்டுப் படுகொலை செய்திருந்தனர்.

இது உலகத் தமிழர்களிடையே தோற்றுவித்த பல்வேறு கேள்விகள் ஒருபுறம் இருக்க சிங்களத்தின் ‘புலியுயிர்ப்பு’க் கற்பனையில் ‘அதிர்வு’க் கோட்டை கட்டி உலகத் தமிழர்களை மனச்சோர்வுக்கு ஆளாக்கும் நாசகாரக் கைங்கரியத்தில் கட்டாக்காலி இணையம் ஒன்று இறங்கியுள்ளது.

இந்த மூன்று இளைஞர்களும் படுகொலை செய்யப்பட்ட நாள் முதல் ஏதோ பக்கத்திலிருந்து எல்லாவற்றையும் பார்த்தது போன்று இக்கட்டாக்காலி இணையம் பரபரப்பான செய்திகளை வெளியிட்டு வருவதோடு, ‘கண்ணனின்’ கீதா உபதேசப் பாணியில் புலம்பெயர் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு அறிவுரை கூறவும் முற்படுகின்றது.

இக் கட்டாக்காலி இணையம் கட்ட முற்படும் ‘அதிர்வு’க் கோட்டையின் கொத்தளமாக தெய்வீகன் பயன்படுத்திய வாகனம் என்று கூறி தமது முத்திரை பொறிக்கப்பட்ட நிழற்படம் ஒன்றையும் கடந்த 22.04.2014 அன்று குறிப்பிட்ட கட்டாக்காலி இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

உண்மையில் இந்த நிழற்படம் 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26ஆம் நாளன்று ருசிய இணையத்தளம் ஒன்றில் வெளிவந்த படமாகும். இந்நிழற்படம் வெளிவந்த பொழுது வன்னியின் கிழக்குப் பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

அந்த நிழற்படத்தில் உள்ள வாகனத்தையே தற்பொழுது தேவியன் பயன்படுத்திய வாகனம் என்று கூறி உலகத் தமிழர்களிடையே ‘அதிர்வு’ ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் அம்புலி மாமா கதையொன்றை இந்தக் கட்டாக்காலி இணையத்தளம் அவிழ்த்து விட்டுள்ளது.

இதனை வெறுமனவே உலகத் தமிழர்களை ஏமாற்றும் நோக்கத்துடன் இக் கட்டாக்காலி இணையத்தளம் செய்திருப்பதாக நாம் கருத முடியாது.

மாறாகத் சிங்களத்தின் ‘புலியுயிர்ப்பு’க் கற்பனையில் ‘அதிர்வு’க் கோட்டை கட்டி, உலகத் தமிழர்களை மனச்சோர்வுக்கு உட்படுத்தி, அவர்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்கும் நாசகார நோக்கத்துடனேயே இந்த ஈனத்தனமான செய்கையைக் குறிப்பிட்ட கட்டாக்காலி இணையம் செய்துள்ளது.

வெடிவைத்தகல் பகுதியில் சிங்களப் படைகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உயிரூட்டம் அளிக்க முற்பட்டார்களா? இல்லையா? என்பதெல்லாம் இங்கு அனாவசியமானது. ஏனென்றால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கியவர் என்ற வகையில் அதற்கு உரிமைகோரும் முழு உரிமையும், தலைமை தாங்கும் தகமையும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உரித்தானது.

எவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மறுசீரமைக்கவும் முடியாது, உருவாக்கவும் முடியாது, அதற்கான அருகதையும் அவர்களுக்குக் கிடையாது.

இதனைத்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் ‘தலைமைச் செயலகம்’ என்ற பெயரில் 21.07.2009 அன்று கே.பியைத் தலைவராகக் கொண்டு சிங்களத்தின் பிடியில் இருந்த ராம், சுரேஸ் (அமுதன்) ஆகியோரால் உருவாக்கப்பட்ட கும்பல் உலகத் தமிழர்களால் நிராகரிக்கப்பட்டமை உணர்த்தி நிற்கின்றது.

தவிர தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உயிர்த்தெழ முற்படுகின்றது என்று கூறுவது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களினதும், அவரது சிந்தனையில் உருவான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினதும் இருப்பை மறுதலிக்கும் செய்கையே தவிர வேறேதுமில்லை.

முதுபெரும் தளபதி கிட்டு அவர்களின் வார்த்தையில் கூறுவதானால் ‘தலைவர் இல்லையென்றால் இயக்கம் என்று ஒன்று இல்லை’.

அதாவது தலைவர் இல்லையென்று கூறுவது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு முடிவுரை எழுதுவதாகும். அதேபோன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லை என்று கூறுவதும் தலைவர் அவர்களுக்கு முடிவுரை எழுதுவதாகும்.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடனான தொடர்பை 2009 மே 18-இற்குப் பின்னர் உலகத் தமிழினம் இழந்திருப்பது என்னவோ உண்மையென்றாலும், அதன் அர்த்தம் தலைவர் அவர்கள் இல்லை என்பதாகாது.

அதேபோன்று 2009 மே 18-உடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் இடைநிறுத்தம் பெற்றிருந்தாலும், அதன் அர்த்தம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிந்து விட்டது என்பதாகாது.

எனவே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்டம் அளிப்பதற்கு எவராவது முற்பட்டார்கள் என்று கூறுவதானது தலைவர் அவர்களினதும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினதும் இருப்பை மறுதலிப்பதாகும்.

வெடிவைத்தகல் பகுதியில் சிங்களப் படைகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் யார் என்பது இங்கு ஆராயப்பட வேண்டிய ஒன்றன்று. அவர்கள் யாராக இருந்தாலும் மூன்று தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ஆனால் அவர்கள் பயன்படுத்திய வாகனம் என்று கூறி 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26ஆம் நாளன்று, அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், வெளிவந்த நிழற்படம் ஒன்றை உலகத் தமிழர்களிடையே ‘அதிர்வு’ ஏற்பட வேண்டும் என்ற ஒரேயொரு நோக்கத்திற்காக இந்தக் கட்டாக்காலி இணையம் வெளியிட்டிருப்பது அற்பத்தனமானது, ஈனத்தனமானது.

‘கண்ணனின்’ கீதா உபதேசமாக இவ்வாறான அற்பப் பதர்கள் கூறும் கருத்துக்கள்கூட உலகத் தமிழர்களால் அற்பத்தனமானவையாகவே பார்க்கப்படும் என்பதுதான் உண்மை.
http://www.sankathi24.com/news/40939/64//d,fullart.aspx

Geen opmerkingen:

Een reactie posten