தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 24 april 2014

புலம்பெயர் தமிழர்களின் 4,000 பேர் அடங்கிய பட்டியலை தயாரிக்கும் இலங்கை !

ESSO பெற்றோல் ஸ்டேஷனில் 30,000 லீட்டர் டீசலை களவாடியது இலங்கையரா ?
23 April, 2014 by admin
எஸ்ஸோவினுடைய(ESSO) எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று, சவுத்ஹம்டனுக்கு அருகிலுள்ள பவுலி என்னும் இடத்தில் அமைந்திருக்கிறது. இங்கிருந்து குழாய் வழியாக பெற்றோல் மற்றும் டீசல் அருகில் உள்ள நிலையங்களுக்குச் செல்கிறது. நிலத்திற்கு கீழ் செல்லும் இக் குழாயினூடாக மிகவும் நுட்பமான முறையில் சுமார் 30,000 ஆயிரம் லீட்டர் டீசல் களவாடப்பட்டுள்ளது அன் நிறுவனத்திற்கு தெரியவந்துள்ளது. குறித்த இந்த டீசல் எங்கே சென்றது என்று தெரியாமல் கலங்கிய நிறுவனம் இது திருட்டாக இருக்கலாம் என்று, பொலிசாருக்கு அறிவித்தார்கள். இதனையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது. குறித்த இந்த குழாயில் இருந்து நுட்பமான முறையில், டீசலைக் களவாடி உள்ளார்கள் என்பதனை பொலிசார் கண்டுபிடித்துள்ளார்கள்.

திருடப்பட்டதாக கருதப்படும் ஆயிரக்கணக்கான லீற்றர் டீசல், ஹம்ஸயர் பிரதேசத்தின் ரொம்சி மேற்கு- வெலோ பகுதியிலுள்ள கைத்தொழிற்பேட்டையொன்றில் சேகரிப்புத் தாங்கியொன்றில் தேக்கி வைக்கப்பட்டிருப்பதனை பொலீசார் மேலும் கண்டுபிடித்துள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. பொலிசார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையில் சலிஸ்பரி பகுதியைச் சேர்ந்த 32 மற்றும் 34 வயதையுடைய இருவர் ஞாயிற்றுக்கிழமை சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு பின்னர் திங்கட்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் இலங்கையர் என்றும் மற்றையவர் பாக்கிஸ்தானியர் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இதனை உறுதிசெய்ய முடியவில்லை. அத்தோடு குற்றவாளிகள் பாதுகாப்பு சட்டத்தின் ஒரு அங்கமாக தாம் அவர்களின் பெயரை வெளியிட மாட்டோம் எனப் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

கைதாகி தற்போது பிணையில் விடுதலையாகியுள்ள இவ்விருவரும் குற்றவாளி என்று நீதிமன்றம் இனம் கண்டால் மாத்திரமே தாம் அவர்களின் பெயரை வெளியிடுவோம் எனவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், கைதானவர்கள் ஆசிய நாட்டவர்கள் என உறுதிசெய்துள்ளார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். 
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6726
புலம்பெயர் தமிழர்களின் 4,000 பேர் அடங்கிய பட்டியலை தயாரிக்கும் இலங்கை !
24 April, 2014 by admin
புலம்பெயர் நாடுகளில் உள்ள சுமார் 4,000 தமிழர்களது பெயர் பட்டியல் ஒன்றை, இலங்கை அரசு தயாரித்து வெளியிட உள்ளதாக கொழும்பில் இருந்து சில இரகசிய தகவல்கள் கசிந்துள்ளது. சமீபத்தில் வெளிநாடுகளில் இயங்கிவரும் 16 தமிழ் அமைப்புகளை பயங்கரவாத அமைப்பாக இலங்கை பிரகடனப்படுத்தியது. மேலும் 400 தமிழர்களின் பெயர்களை வெளியிட்டு, அவர்கள் இலங்கை வர தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. இது இவ்வாறு இருக்க, சமீபத்தில் தான் கைதுசெய்த முன் நாள் விடுதலைப் புலிகள் சிலரை துன்புறுத்தி அவர்களிடம் இருந்து, பலரது பெயர்கள் பெறப்பட்டு வருவதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. சித்திரவதையை தாங்க முடியாத இந்த இளைஞர்கள் அதில் இருந்து தப்பித்தால் போதும் என்று சில பெயர்களை குறிப்பிட்டுள்ளார்கள்.

இருப்பினும் அப்பெயர்கள் உண்மையானவையா என்று கூட தெரியாத நிலையில், மிகவும் அவசரமாக ஒரு பட்டியலை இலங்கை புலனாய்வு தயாரித்து வருகிறது. புலம்பெயர் தமிழர்களை பழிவாங்கவும், அவர்களை அடக்கி ஒடுக்கவுமே இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் என்ன நடந்தாலும், புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் உறவுகள் தமது உரிமைப்போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. தொடர்ந்து போராட உறுதியாகவே உள்ளார்கள். இலங்கையால் காட்டப்படும் இந்தப் பூச்சாண்டிக்கு எல்லாம் நாம் அடி பணிய மாட்டோம் என்று, பல இளையோர்கள் தெரிவித்துள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6730

Geen opmerkingen:

Een reactie posten