"வட தமிழ் அமைப்பினரால்" உரிமை கோரப்பட்டுள்ள அந்த துண்டுபிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
திருகோணமலை மாவட்ட எல்.ரீ.ரீ.ஈ அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரனின் மனைவிதான் அனந்தி. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தலைமை லிகிதராகக் கடமையாற்றிய இவர் தற்போது அரசியலுக்குள் புகுந்து குறுகிய காலத்திற்குள் சர்வதேசத்தைத் தன்பக்கம் திருப்புவதற்காக புலிகள் வலையப்பின் திட்டத்திற்கு அமைவாக செயற்படுவதை நீங்கள் அறிவீர்களா ? இவர் வெளிநாட்டு புலி ஆதரவு அமைப்புக்கள், சில புலம்பெயர் தமிழ்க் குழுக்கள், மீண்டும் புலிகள் தலையெடுப்பதற்கு உதவும் அமைப்புக்கள், மற்றும் மறைந்து வாழும் புலித் தலைவர்களின் உதவியோடு கூட்டமைப்பு சார்பாக வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றதை நீங்கள் அறிவீர்களா ?
இவர் அரசியல் பலத்தைப் பெற்றவுடன் தமிழ்க் கலாசாரத்திற்கு ஒவ்வாத டெனிம் மற்றும் ரீ சேர்ட் அணிந்து கொண்டு புலிகளின் தேவைக்காக கனடா, ஜேர்மன், டென்மார்க், நோர்வே மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் சுற்றுவதை நீங்கள் அறிவீர்களா ? அங்கு செல்லும் போதெல்லாம் அவர் புலிகள் அமைப்பைச் சந்தித்துள்ளார். இவ்வமைப்புக்களுக்கு முறையான தலைமைத்துவம் இல்லையென்பதினால் தனது ஆதரவுடன் மறுபடியும் புலிகளின் அரசியல் அபிலாஷைகளை சர்வதேச அரங்கில் கொண்டு செல்ல முயற்சிக்கின்றார்.
இந்த நோக்கத்திற்காக சட்டவிரோதமாகவும் மற்றும் கப்பம் மூலமும் புலிகளினால் சேர்க்கப்பட்டு இன்று வரை பகிரங்கப்படுத்தப் படாமல் இருக்கும் பணம் அனந்திக்குக் கொடுக்கப்படுகின்றது. இப்படி குற்றச்சாட்டுகள் அடங்கிய துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசுக்கு பெரும் சவாலாக இருந்து ஆனந்தியை மெளனிக்கச் செய்யவே தற்போது திட்டமிட்டப்பட்ட வகையில் இலங்கை அரசின் புலனாய்வுத்துறையினர் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6663
Geen opmerkingen:
Een reactie posten