[ புதன்கிழமை, 09 ஏப்ரல் 2014, 01:46.16 PM GMT ]
கனடாவின் ஸ்காபுறோ நகரில் கடந்த 6ம் திகதி நடைபெற்ற விருது விழாவில் ஐரோப்பாவிற்கான விருதினை ஜேர்மனி வாழ் துரை.கணேசலிங்கம் பெற்றுக் கொண்டுள்ளார்.
இவ்விழாவில் கனடாவின் ஒன்றாரி யோமாகாணத்தின் உயர் கல்வி அமைச்சர் கௌரவ பிராட் டுகுட் சமூக நல்லுறவு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
மேலும் கனடாவில் இயங்கிவரும் பாரதி ஆர்ட் இசை நிறுவனத்தின் அதிபர் திருமதி வாசனுக்கு கலை இலக்கிய மேன்மை விருதும், வர்த்தக் வெற்றியாளருக்கான அதி உயர் விருது வீடு, விற்பனை முகவர் நிறுவன அதிபர் திருசெல்வா வெற்றி வேலுக்கும், உதயன் தலைமைத்துவ விருது கனடாவின் கியுபெக் மாகாணத்தில் வாழும் திருமதி வதனி சிறிக்கந்தராசாவுக்கும் வர்த்தக வெற்றியாளர் (மொன்றியால் மாகாணம்) சிறப்பு விருது திரு கே. எம். ஆர் ராஜகோபால் அவர்களுக்கும் வழங்கப்பட்டன.
இவ் விருது வழங்கும் நிகழ்விற்கு கனடாவின் பல அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
ஜேர்மனி வாழ் திரு துரை. கணேசலிங்கம் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyETdLXns6.html
தமிழர் கலை,கலாசார பண்பாட்டுத் தளத்தில் “காப்போம் தமிழை”: புகலிட இளையோர்களுக்கான செயற்திட்டம்
[ புதன்கிழமை, 09 ஏப்ரல் 2014, 02:09.39 PM GMT ]
லண்டனில் அமைந்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பணியகத்தில் உத்தியோகபூர்வமாக இச்செயற்திட்டத்தினை இளையோர் மற்றும் பண்பாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் கார்த்திகா விக்னேஸ்வரன் அவர்கள் அறிமுகப்படுத்தினார்.
புலம்பெயர் தமிழ் இளையோர்கள் மத்தியில் தமிழர் கலை - கலாசார - பண்பாட்டுத்தளத்தில் "காப்போம் தமிழை" எனும் செயற்திட்டம் முனைப்பு பெறுகின்றது.
கடந்த 6ம் திகதி இடம்பெற்றிருந்த இந்த அறிமுக நிகழ்வில் பல தமிழ் இளையோர்கள் பங்கெடுத்திருந்தனர்.
அமைச்சர் கார்த்திகா விக்னேஸ்வரன் அவர்கள் இச்செயற்திட்டம் தொடர்பில் விளக்கவுரையினை வழங்கியிருந்ததோடு, வருகை தந்திருந்த இளையோர்களோடு கருத்துக்களையும் பரிமாறியிருந்தார்.
இதேவேளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளான நிமலன் மற்றும் அகிலன் ஆகியோரும் இச்செயற்திட்டத்துக்கு வலுவூட்டும் வகையில் கருத்துக்களை பகிர்ந்திருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyETdLXns7.html
இந்தியாவின் எதிர்ப்பார்ப்பு பற்றி இலங்கைக்குத் தெரியும்: சுஜாதா சிங்
[ புதன்கிழமை, 09 ஏப்ரல் 2014, 02:43.14 PM GMT ]
இலங்கை விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு விசாரணை நடாத்துவதனை விரும்பவில்லை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்கவில்லை.
இதன் மூலம் இலங்கையுடன் நெருங்கிய உறவுகளைப் பேண வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை விவகாரம் தொடர்பில் நிறைவேற்றிய தீர்மானம், அதன் அதிகாரங்களுக்கும் அப்பாற்பட்டது என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும்.
இலங்கையுடன் நெருங்கிய தொடர்புகள் பேணப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyETdLXnty.html
Geen opmerkingen:
Een reactie posten