மூன்றாம் தரப்பு அனுசரனைக்கு நாம் தயார்: இரா.சம்பந்தன்
கடந்த மூன்று தசாப்தகாலமாகப் போர் நடைபெற்ற இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும். அதற்கு இங்கு நடந்தேறிய கறைபடிந்த சம்பவங்களுக்கு இலங்கை அரசு பொறுப்புக் கூறியே ஆகவேண்டும். அதனைத் தென்னாபிரிக்கப் பயணத்தின் போது அந்த நாட்டு முக்கியஸ்தர்களிடம் நாம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளோம் என தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
அந்தப் பயணம் குறித்துக் கருத்துத் தெரிவித்த போதே தென்னாபிரிக்க ஒவ்வொரு நடவடிக்கைகளையும் நாம் அவதானித்துக் கொண்டிருப்போம். அதற்கேற்றவாறு எமது பங்களிப்புகளை வழங்குவோம். நாம் இனியும் ஏமாறத் தயாரில்லை.” என்றும் அவர் குறிப்பிட்டார்.
எமது தென்னாபிரிக்கா பயணம் ஆக்கபூர்வமாக திருப்தியாக அமைந்தது. நாம் சொல்ல வேண்டிய விடயங்கள் அனைத்தையும் தென்னாபிரிக்க அரச தரப்பினரிடம் தெட்டத் தெளிவாகக் கூறிவிட்டோம் எனத் தெரிவித்தார்.
இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் தீர்வைக் காண்பதற்கும் தென்னாபிரிக்க அரசு முன்வந்துள்ளது. இந்நிலையில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதற்காக தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சூமா விசேட பிரதிநிதி ஒருவரை நியமித்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எமது பயணத்தின் போது ரமபோவை நாம் தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளோம். அத்துடன் தென்னாபிரிக்க நாட்டின் வெளிவிவகார அமைச்சர், வெளிவிவகார பிரதியமைச்சர், தென்னாபிரிக்க தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் ஆகியோரையும் நாம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளோம் என்றார்.
தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும். அவர்கள் அரச படைகளின் தொந்தரவுகள் எதுவுமின்றி சகல உரிமைகளுடன் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்பதை தென்னாபிரிக்காவிடம் நாம் எடுத்துக் கூறியுள்ளோம். தென்னாபிரிக்காவின் இந்த நல்லிணக்க முயற்சிகளை நாம் வரவேற்கின்றோம். இதற்கு எமது ஆதரவைத் தெரிவித்துள்ளோம் எனவும் அவர் கூறுகின்றார்.
ஆனால், இலங்கை அரசு இதற்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குமா என்பதில் எமக்கு சந்தேகம் உள்ளது. ஒவ்வொரு கட்ட நடவடிக்கைகளையும் நாம் அவதானித்துக் கொண்டிருப்போம். அதற்கேற்றவாறு எமது பங்களிப்புகளை வழங்குவோம். நாம் இனியும் ஏமாறத் தயாரில்லை என்றார்.
http://www.jvpnews.com/srilanka/65739.html
மலேசியாவிலிருந்து 60 லட்சம்! புதிய புலிகளுக்கு வழங்கியவர் கைது
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவிற்கு நிதி உதவிகளை வழங்கிய நபர் ஒருவரை தாம் கைது செய்திருப்பதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நெடுந்தீவு பகுதியில் வைத்து; கைது செய்யப்பட்ட இந்த நபர், புலிகள் அமைப்பை மீள ஒருங்கிணையச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள புலிகளின் புலனாய்வுப் பிரிவினருக்கு நிதி உதவிகளை வழங்கியுள்ளார் எனக் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
இரண்டு கடவுச்சீட்டுக்கள் தம்மிடம் வைத்திருக்கும் இவர் மலேசியாவிற்கு தொடர் பயணங்களை மேற்கொள்பவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் இலங்கையின் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளதாக கொழும்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதேவேளை பெரும் தொகை பணப்பரிமாற்றங்களை செய்யும் தமிழ் வர்த்தகர்கள், அல்லது சிறு வியாபாரிகள் அனாவசிய சந்தேகங்களுக்கு உட்படுத்தப்பட்டு புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
http://www.jvpnews.com/srilanka/65743.html
இலங்கை மீது படையனுப்பும் அதிகாரம் இந்தியப் பிரதமருக்கு உண்டு: கேணல் ஹரிஹரன்
சிறிலங்காவில் இறுதிக்கட்டப் போரில் இந்தியப் படையினர் நேரடியாகப் பங்கெடுத்தது தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைத் தீர்ப்பாயம் ஒன்றை அமைக்கக் கோரி இந்திய உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுத் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது, அல்லது சில நெருக்கடியான நிலைமைகளின் போது படைகளை அனுப்பும் அதிகாரம் பிரதமருக்கு உள்ளது. 1989இல் மாலைதீவில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்ட போது, அந்த நாட்டு அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்தியப்படைகள் அங்கு அனுப்பப்பட்டன.
சிறிலங்காவைப் பொறுத்தவரையில், 2008, 2009இற்கு முன்னரே நெடுங்காலமாக நெருக்கமான பாதுகாப்பு உறவுகள், குறிப்பாக கடற்படையுடனான உறவுகள் இந்தியாவுக்கு இருந்து வந்துள்ளன. அதைவிட போரின் இறுதிக்கட்டத்தில், பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்தது.
அப்போது இந்தியாவிடம் ஆயுதங்களை சிறிலங்கா கோரியது. அதற்கு போருக்குப் பயன்படும் ஆயுஙதங்களை வழங்க முடியாது என்று இந்தியா கூறிவிட்டது. எனினும், விமானத் தாக்குதலில் இருந்து தடுப்பதற்கான சில ஆயுதங்களையும், ரேடர்களையும் இந்தியா வழங்கியது. அவை போருக்குப் பயன்படாத ஆயுதங்கள் என்று இந்தியா கூறியது.
பயிற்சி, ஆயுத உதவிகள் தவிர்ந்த, இந்தியப் படைகள் அங்கு நேரடியாகப் போரில் பங்கேற்றதாக நான் அறியவில்லை. ஆனால், இந்திய நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி, படைகளை அனுப்பும் அதிகாரம் இந்தியப் பிரதமருக்கு உள்ளது. எனினும் பின்னர் அதுபற்றி நாடாளுமன்றத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
இந்தியாவினது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று வரும் போது, அது உள்நாட்டிலாக இருந்தாலும், வெளிநாட்டிலாக இருந்தாலும், அதற்கெதிராக நடவடிக்கையில் இறங்க முடியும். விடுதலைப் புலிகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாக இருப்பதால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கையில் படைகளை ஈடுபடுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/65756.html
Geen opmerkingen:
Een reactie posten