தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 20 april 2014

ஆஸி.யில் இலங்கை அகதிகள் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள தடை


கொல்லப்பட்ட புலி உறுப்பினர்கள் இந்தியா தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்? - நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க முயற்சி?
[ ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014, 12:22.33 AM GMT ]
அண்மையில் நெடுங்கேணி பிரதேசத்தில் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இந்தியா தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.  சிங்களப் பத்திரிகையொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
நெடுங்கேணி பிரதேசத்தில் வைத்து கோபி, தேவியன் மற்றும் அப்பன் ஆகிய மூன்று தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்களை சுட்டுக் கொன்றதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இறுதி நேரத்தில் செய்மதி தொலைபேசி ஊடாக இந்தியா செல்வது குறித்து பேசப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விநாயகம் என்ற புலித் தலைவருடன் இவ்வாறு பேசப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
லண்டனில் உள்ள புலித் தலைவர் ஒருவருடன் இறுதியாக ஏழு நிமிடங்கள் பேசியுள்ளனர்.
செய்மதி தொலைபேசியில் வெளிநாட்டைச் சேர்ந்த யார் யாருடன் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க முயற்சி?
நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச கடும்போக்குடைய அமைப்புக்கள் புலிகளுடன் இணைந்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. சர்வதேச புலனாய்வு பிரிவொன்று இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச கடு;ம்போக்குடைய சில அமைப்புக்கள் புலிகளின் சர்வதேச வலையமைப்புடன் இணைந்து செயற்பட முயற்சிக்கின்றனர்.
இந்தியாவின் றோ உளவுப் பிரிவும் இவ்வாறான ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதேவேளை, தலிபான் மற்றும் அல்கொய்தா இயக்க உறுப்பினர்கள் இலங்கை இளைஞர்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அழைத்துச் சென்ெறு பயிற்சி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய கிழக்கின் இரண்டு நாடுகளில் இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
பொதுபல சேனா அமைப்பை இலக்கு வைத்து கடும்போக்குடைய அமைப்புக்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆஸி.யில் இலங்கை அகதிகள் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள தடை - பப்புவா நியுகினியில் நில அதிர்வு! - நவுரு தீவின் அகதி முகாமில் டெங்கு நோய்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014, 12:15.12 AM GMT ]
அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு கடந்த இரண்டு வாரங்களுக்காக சட்ட ஆலோசனைகளை பெறவும்ää சட்டத்தரணிகளை சந்திக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலக சோசலிஸ இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி அங்குள்ள இலங்கை அகதிகள் தங்களை நேர்மையானவர்கள் என்பதை நிரூபித்துக் கொள்ள இடமளிக்கப்படுவதில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் பாதுகாப்பு வீசா நிராகரிக்கப்பட்ட அகதிகள் மீண்டும் அதற்கு மேன்முறையீடு செய்யவும் அனுமதிக்கப்படுவதில்லை.
இது சர்வதேச அகதிகள் சட்டத்துக்கு எதிரானது என்று அந்த இணையத்தளம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
பப்புவா நியுகினியில் நில அதிர்வு- சுனாமி எச்சரிக்கை
இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பப்புவா நியுகினி பகுதியில் பாரிய நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளது.
அங்குள்ள பங்குனா நகரில் இருந்து 75 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற்பரப்பில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.
இது 7.5 மெக்னிடியுடன் அளவில் பதிவாகியுள்ளது.
நவுரு தீவின் அகதி முகாமில் டெங்கு நோய்
இலங்கை அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நவுரு தீவின் அகதி முகாமில் டெங்கு நோய் பரவி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமைகள் ஆர்வலகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த முகாமில் 3 பேர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் இருவர் அகதிகள் என்றும், ஒருவர் அந்த முகாமின் பணியாளர் என்றும், அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அங்கு ஆலிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதில் பாதிப்புகள் குறித்த உடனடி தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை..

Geen opmerkingen:

Een reactie posten