[ valampurii.com ]
குறித்த விமானப்படை வீரரின் சார்பாக விடுக்கப்பட்ட பிணை கோரிக்கையினை நிராகரித்த நீர்கொழும்பு மேலதிக நீதிவான் திலகரத்ன பண்டார, சந்தேக நபரை எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மீரிகமவில் கடமையாற்றும் விமானப்படை வீரரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவராவார்.
சந்தேக நபரை நீர்கொழும்பு பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸார் கைது செய்து மன்றில் ஆஜர் செய்தனர்.
வழக்கின் முறைப்பாட்டாளரான ஜேர்மன் பிரஜை 25 வயதுடைய திருமணமான பெண்ணாவார். இவர் தனது கணவருடன் இலங்கைக்கு சுற்றலா வந்துள்ளார்.
நீர்கொழும்பு சுற்றலாத்துறை பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள இவர்கள் குளிப்பதற்காக அருகிலுள்ள கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
கணவர் கடற்கரையில் இருக்கும் போது ஜேர்மன் பெண் மாத்திரம் கடலில் குளித்துக் கொண்டிருந்துள்ளார்.
இதன் போது கடலில் குளித்துக் கொண்டிருந்த சந்தேக நபரான விமானப்படை வீரர் அந்த வெளிநாட்டுப் பெண்ணின் அருகில் நீந்தி வந்து பெண்ணின் உடலை தொட்டுள்ளார். இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்து ஏசியுள்ளார்.
இதனை அடுத்து சந்தேக நபர் தனது காற்சட்டையை கீழிறக்கி காண்பித்து அந்த ஜேர்மன் பெண்ணுடன் சேஷ்டை புரிந்துள்ளார் என்று முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது
http://www.tamilwin.com/show-RUmsyERaLXfu0.html
Geen opmerkingen:
Een reactie posten