தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 26 april 2014

வெளிநாடுகளுக்கு களவாக ஆட்களை அனுப்பி காணாமல் போனோர் பட்டியலிலும் சேர்ப்பு…!!


553172832Untitled-1
இரண்டு வருட குறுகிய காலத்தில் சட்டவிரோதமாக 500க்கு மேற்பட்டவர்களை இரகசியமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்த வர்த்தகர் ஒருவரை இரகசியப் பொலிஸார் வவுனியாவில் கைது செய்துள்ளனர்.
அருனானந்தன் தினேஷ்ராஜ் என்ற பெயருடைய இவர் 2012 முதல் இதுவரை ஆட்களை தொழில்களுக்கு அனுப்புவதற்காக பணம் பெற்று திருட்டுத்தனமாக கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் வசிக்கும் 37 வயதுடைய இவர் யுத்தம் முடிவுறுவதற்கு முன்னரும் தமிழர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதற்கிடையில் அக்காலத்தில் இலங்கையிலிருந்து வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்ற நபர்களை யுத்தத்தினால் காணாமற் போனோரின் பட்டியலில் சேர்த்து இலங்கையில் உள்ள அவர்களின் உறவினர்கள் மூலமாக இவர் நஷ்டஈடு பெற்ற பல சம்பவங்களும் வெளியாகியுள்ளன.
இவ்வாறு அனுப்பப்பட்ட நபர்கள் பற்றிய விபரங்களை அறிந்து காணாமற் போனவர்கள் பட்டியலில் இவர்களும் பெயரிடப்பட்டுள்ளனரா என்று அறிவதற்கான விசாரணைகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.
புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் இந்த வர்த்தகர் புலி உறுப்பினர்களையும் வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன் சில தீவுகளுக்கு பலரை இவர் அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரகசியப் பொலிஸார் சந்தேக நபர்களை தொடர்ந்தும் விசாரித்து வருகின்றனர்.
 http://www.athirady.com/tamil-news/news/365680.html#sthash.y5nMa2Qa.WxzijkkE.dpuf

Geen opmerkingen:

Een reactie posten