தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 17 april 2014

ஞானசார தேரருக்கு எதிரான விசாரணைகள் சிஐடியிடம் ஒப்படைப்பு



புத்தருக்கு அவமதிப்பு: மாநாயக்க தேரர் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு
[ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014, 11:27.17 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அஸ்கிரிய மாநாயக்கர் உடுகம ஸ்ரீ புத்த ரக்கித தேரரை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார்.
அஸ்கிரிய விகாரைக்கு இன்று காலை சென்ற ஜனாதிபதி, மாநாயக்கரிடம் ஆசி பெற்றார். இதன் போது மாநாயக்க தேரர் ஜனாதிபதியிடம் விசேட மகஜர் ஒன்றை கையளித்தார்.
பதுளை மாவட்டம் ஹப்புத்தளை, பேரகல பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் நாட்டின் பல இடங்களில் மக்களிடம் பெற்ற கையெழுத்துக்களுடன் கூடிய மகஜரையே மாநாயக்கர், ஜனாதிபதியிடம் கையளித்தார்.
பத்திரிகை உட்பட அச்சு தாள்களில் புத்த பகவானின் படம் அச்சிடப்படுவதுடன், அவை பின்னர் குப்பைகளிலும் பல்வேறு இடங்களிலும் வீசப்படுவது புத்த பகவானுக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கை என அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் புத்தரின் படங்களை பத்திரிகை மற்றும் அச்சு தாள்களில் அச்சிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகஜரில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகஜர் குறித்து விசேட கவனத்தை செலுத்துவதாக ஜனாதிபதி இதன் போது கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESbLXkx5.html
ஞானசார தேரருக்கு எதிரான விசாரணைகள் சிஐடியிடம் ஒப்படைப்பு
[ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014, 12:47.25 PM GMT ]
பொதுபல சேனா அமைப்பு எதிரான விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
கொழும்பில் நடைபெற்ற ஜாதிக பலசேனா அமைப்பின் ஊடக சந்திப்பிற்கு இடையூறு விளைவித்து, வட்டரெக்க விஜித தேரருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் புனித குர் ஆனை அவமதித்தமை ஆகியன தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் கொம்பனித் தெரு பொலிஸார் விசாரணைகளை நடத்தினர்.
இந்த நிலையில், பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyESbLXjoz.html

Geen opmerkingen:

Een reactie posten