வடக்கில் படையினர் நிலைகொண்டிருக படையினரின் எடுத்த நாடகம் வெற்றி
கண்டியில் நேற்று பௌத்த பீடாதிபதிகளைச் சந்தித்து, வவுனியா மோதல் மற்றும் ஜெனிவா கூட்டத்தொடர் குறித்து விளக்கமளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வவுனியா சம்பவம் குறித்து கொழும்பில் உள்ள இராஜந்திர வட்டாரங்களுக்கு நான் விளக்கமளிக்கவுள்ளேன்.
வடக்கில் விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைய முனைவதாகவும் அதனைத் தடுக்க அங்கு படையினரை நிறுத்த வேண்டியுள்ளதாகவும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நாம் கூறியிருந்தோம்.
கோபி தொடர்புடைய மோதல், சிறிலங்கா அரசாங்கத்தின அந்த நிலைப்பாடு சரியானது என்பதை நிரூபித்துள்ளது.
வடக்கிலிருந்து இராணுவத்தை விலக்குமாறு மேற்கு நாடுகள் வற்புறுத்துகின்றன.
இராணுவத்தைக் குறைத்தால்தான் வழமை நிலை திரும்பும் என்று அவை கூறுகின்றன.
ஆனால் இறையாண்மையுள்ள அரசு என்ற முறையில் எங்கள் தேசியப் பாதுகாப்புக் குறித்து நாம்தான் முடிவு செய்யவேண்டும்.
இப்போது எங்கள் தீர்மானம் சரியானது தான் என்பதை அனைத்துலக சமூகத்துக்கு நாம் கூறமுடியும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/65503.html
அனைத்துலக விசாரணை நம்பிக்கையில்லை – மகிந்த சமரசிங்க
அனைத்துலக விசாரணை நம்பகத்தன்மை கொண்டதாகவோ, சுதந்திரமானதாகவோ இருக்காது என்று சிறிலங்கா அரசாங்கம் உணர்கிறது.
ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தாது.
அதற்குப் பதிலாக போர் தொடர்பான விடயங்களைக் கையாண்டு கவனிப்பதற்கு உள்நாட்டுப் பொறிமுறையை முன்னெடுக்கும்.
நல்லிணக்கம் பற்றிய விடயத்தை உள்நாட்டு நடைமுறைகளின் மூலம் கவனிப்பதே பொருத்தமானது என்பதுதான் அரசின் கருத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/65500.html
Geen opmerkingen:
Een reactie posten