தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 9 april 2014

புலிகளின் முக்கியஸ்தர் மலேஷியாவில் அல்ல! கட்டுநாயக்காவில் கைது: பொலிஸ் பேச்சாளர்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் எனக் கருதப்படும் கபிலன் எனப்படும் நந்தகோபன் தற்சமயம் இலங்கை பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். மூன்று வாரங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இலங்கையில் இருந்து மலேசியா தப்பிச் சென்ற நந்தகோபன் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி லண்டன் செல்ல முற்பட்ட வேளை மலேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதன் பின் வழக்கு தொடரப்பட்டு குற்றவாளியாக இனங்காணப்பட்ட நந்தகோபன் 6 மாதங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறை தண்டனையின் பின் மலேசிய அதிகாரிகள் நந்தகோபனை இலங்கைக்கு நாடு கடத்தினர். அதன்போதே அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். நந்தகோபன் நெடியவன் குழுவின் இரண்டாம் நிலைத் தலைவர்களுள் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/65048.html

Geen opmerkingen:

Een reactie posten