தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியா தடை செய்வதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமே காரணம் என்று, திராவிடர் கழகம் குற்றம் சுமத்தியுள்ளது.
அந்த கட்சியின் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளர் ஜெயலிலதா ஜெயராம், இலங்கை தமிழர் விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டில் இருந்ததில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை கைது செய்து. தமிழ் நாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அவரே உத்தரவிட்டிருந்தார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்களை அவர் தமிழக சட்ட சபையில் நிறைவேற்றி இருக்கிறார்.
இவ்வாறான நிலைப்பாடுகளாலேயே இந்திய மத்திய அரசாங்கம் அதனை தமக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டு விடுதலைப் புலிகளை தடை செய்தது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESVLXms2.html
Geen opmerkingen:
Een reactie posten