தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 15 april 2014

பொதுபலசேனா பயங்கரவாதப் பட்டியலில்!

சிங்களத் தீவிரவாத இயக்கங்கள் இப்பொழுது போட்டி: அமைச்சர் பஷீர்

‘காணி வரலாற்றைத் தெரிந்து கொள்ளாத சக்திகள் இன்று தமிழர்களுக்கும் – முஸ்லிம்களுக்கும் இடையிலும் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலும் பகைமையயை ஏற்படுத்துகின்றன’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை நிருவாக சேவைக்குத் தெரிவாகி தற்சமயம் உதவிப் பிரதேச செயலாளர்களாகக் கடமையாற்றிக்கொண்டிருக்கும் ஏறாவூரைச் சேர்ந்த அதிகாரிகளைப் பாராட்டும் விழா கடந்த சனிக்கிழமை (12) ஏறாவூர் அல் அஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறுகையில், ‘காணிப் பிரச்சினையைப் புரிந்துகொள்ளாமல் முஸ்லிம்களைக் காணிக் கொள்ளையர்கள் என்று அவமானப் பட்டம் சூட்டி முத்திரை குத்துவதற்கு இப்பொழுது இரண்டு பெருந்தேசிய இனங்களும் முனைந்திருக்கிருக்கின்றார்கள். முஸ்லிம்களை காணிக் கொள்ளையர்கள் என்று முத்திரை குத்துவதில்தான் அவர்கள் குறியாய் இருக்கின்றார்கள்.
எங்கிருந்தோ ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்று வடக்கிலே இறக்கிவிட்டு முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்ற அநியாயங்கள் கண் முன்னாலேயே நடைபெறுகின்ற நிலைமை இன்று ஏற்பட்டிருக்கின்றது.
மன்னாரிலே முஸ்லிம்களைத் துவம்சம் செய்துவிட சிங்களத் தீவிரவாத இயக்கங்கள் இப்பொழுது போட்டி போட்டுக்கொண்டு நிற்கின்றன’ என்றார்.
இன்று முஸ்லிம்கள் முள்ளுக் கொப்பில் விழுந்த சேலையைப் போல் மிகக் கூடுதலான நெருக்கடிக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். தங்களை எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளை பணிந்து போய் கையாள்வதா அல்லது எகிறிக் குதித்து அடர்ந்தேறுவதா அல்லது விமோசனத்துக்கான வழிமுறைகளைப் புதிதாகக் கண்டுபிடித்துப் போவதா என்பதுதான் இன்று முஸ்லிம் சமூகத்தின் முன்னாலுள்ள கேள்வி.
புதிதாக ஏற்பட்டிருக்கின்ற இந்தச் சூழ்நிலைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்று நாம் எல்லோரும் இணைந்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும். அதிகாரிகள் மட்டத்தில் துவங்கி ஆய்வாளர்கள் வரை இந்த வியடங்களை அவசரமாகவும் அவசியமாகவும் ஆராய வேண்டும்’ என்று அமைச்சர் மேலும் கூறினார்.
http://www.jvpnews.com/srilanka/65696.html

பொதுபலசேனா பயங்கரவாதப் பட்டியலில்

இலங்கையில் பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கு குரல் கொடுப்பதாகக் கூறும் பொது பல சேனா ஒரு பயங்கரவாத அமைப்பாக பெயரிடப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் அரசியல் வன்முறைகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் ‘பயங்கரவாத ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு கூட்டமைப்பு’ Terrorism Research & Analysis Consortium (TRAC) இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
TRAC – Terrorism Research & Analysis Consortium -’ பயங்கரவாத ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு கூட்டமைப்பு’ என்பது உலக நாடுகளில் அரசியல் வன்முறை தொடர்பில் ஆராச்சி மற்றும் பகுப்பாய்வு செய்யும் சர்வதேச நிபுணர்களை கொண்ட ஒரு ஆய்வு மையமாகும்.
பொதுபல சேனா அமைப்பு இலங்கையில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்வத மதங்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/65699.html

Geen opmerkingen:

Een reactie posten