உலகிலேயே மிகவும் அபாயகரமான தொழிலாளாக வங்கதேசத்தில் நடைபெறும் கப்பல் உடைப்பு வேலை என தெரியவந்துள்ளது.
வங்காள தேசத்தில், சிட்டகாங் நகரில் உள்ள கப்பல் உடைப்பு தளம் உலகின் மிக பெரிய தளமாகும்.
சுமார் 80 கப்பல்களை ஒரே நேரத்தில் உடைக்க, கடற்கரையில் ஒரு எட்டு மைல் தொலைவில் நீண்ட இடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 200,000 மேற்பட்ட வங்கதேசத்தினர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இதுகுறித்து பீட்டர் வின் தேசிய புவியியல் பத்திரிக்கை எழுதாளர் கூறுகையில், நான் அங்குள்ள மக்களை சந்தித்ததில், பலர் மனதில் ஆழமான வடுக்கள் இருந்ததாகவும், அதனை "சிட்டகாங் பச்சை " என மக்கள் அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சில ஆண்கள் விரல்கள் துண்டிக்கப்பட்டும், ஒரு சிலர் ஒரு கண் இழந்தும் வேலை செய்கின்றனர்.
முதலாளிகள் பெரும்பாலும் விபத்துகள் பற்றி அமைதியாக இருக்கும்படி தொழிலாளர்களை மிரட்டுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
கப்பல்கள் கடுமையாக கட்டப்பட்டது, இதனால் அதனை உடைக்கும் வேலை என்பது மிகவும் கடுமையான மற்றும் தாங்க முடியாத வேலையாகும்.
மேலும் கப்பல்கள் கல்நார் மற்றும் நச்சு பொருட்கள் கொண்டு கட்டமைக்கப்படுகின்றது, இதனால் உடல்நலம் தீங்கு விளைவிக்கும் சூழல் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
|
Geen opmerkingen:
Een reactie posten