[ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014, 11:03.48 AM GMT ]
சிவன் ஆலயத்திற்கு வழிபாட்டில் ஈடுபட சென்ற அமைச்சர் ஆலயத்திற்கு அருகில் உள்ள பூசை பொருட்களை விற்கும் கடையொன்றில் 1500 ரூபா பெறுமதியான பூஜை தட்டை கொள்வனவு செய்துள்ளார்.
இதில் பல வகை பழங்களும், பூக்களும், தேங்காயும் இருந்துள்ளன.
பூஜை தட்டுடன் சிவலிங்கம் இருக்கும் மூலஸ்தானத்திற்கு அருகில் சென்ற அமைச்சர், அதனை பூசகரிடம் கொடுத்து வழிபாட்டில் ஈடுபட்டார். வழிபாட்டில் ஈடுபட்ட அமைச்சர் சில நிமிடங்கள் அங்கிருந்ததுடன் பின்னர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அமைச்சர் வழங்கிய பூஜை தட்டில் இருந்த பழங்களை பூசகர் வெளியில் எடுத்த போது அதில் துர்நாற்றம் வீசியுள்ளதுடன் அதில் அழுகிய பழங்கள் இருந்துள்ளன.
பூஜை தட்டை விற்பனை செய்தவர்கள் அதில் அழுகிய பழங்களை வைத்துள்ளதாக புரிந்து கொண்ட பூசகர் அருகில் உள்ள பொலிஸ் காவரணில் அது குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸ் நிலையத்தின் சுற்று சூழல் பிரிவுக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், அதிகாரிகள் வந்து பூஜை தட்டை பரிசோதித்ததுடன், அதனை விற்பனை செய்த கடை உரிமையாளரை அழைத்து அவரை கடுமையாக எச்சரித்தாக பொலிஸார் கூறினர்.
http://www.tamilwin.com/show-RUmsyESbLXkx4.html
மனநல மருத்துவரை நாடுமாறு அமைச்சர் எஸ்.பிக்கு சிறீதரன் எம்பி ஆலோசனை
[ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014, 09:39.02 AM GMT ]
உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க உடனடியாக சிறந்த உளநல மருத்துவரை நாடுவது சிறந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இலங்கை இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்ட கோபி கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் அத்துடன் அவர் பதுங்கியிருக்க வீடுகளையும் பயணம் செய்ய வாகனங்களையும் வழங்கியிருந்ததாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்திருந்தார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்,
அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கூறிய, நாடாளுமன்ற உறுப்பினர் நான் தானா என தென்னிலங்கை ஊடகங்கள் என்னிடம் கேள்வி எழுப்புகின்றன.
எந்த பிரச்சினையை எடுத்துக்கொண்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைபின் மீது குற்றம் சுமத்துவதை அரசில் உள்ளவர்கள் பழக்கமாக்கி கொண்டுள்ளனர். இதனடிப்படையில் உயர்கல்வி அமைச்சரின் குற்றச்சாட்டும் அமைந்துள்ளது.
இதனால் அரசாங்கத்தில் இருப்பவர்கள் தமது மனநிலையில் இருந்து விடுபட வேண்டும்.
அத்துடன் உயர்கல்வி அமைச்சர் சிறந்த மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும் எனவும் சிறீதரன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேவேளை, நெடுங்கேணியில் வைத்து விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்று தெரிவித்து சுட்டுக்கொல்லப்பட்ட கோபி, அப்பன் உட்பட மூவரையும் அதற்கு முன்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. ஒருவர் பாதுகாத்து, மறைத்து வைத்திருந்து போக்குவரத்து வசதியும் செய்து கொடுத்துள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்கா தெரிவித்திருந்தார்.
கொழும்பில் வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை கூறியிருந்தார்.
அவர் அதில் மேலும் தெரிவித்திருந்ததாவது,
கோபியிடமிருந்து கைத்தொலைபேசி ஒன்றைப் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.
அதன் மூலம் சம்பந்தப்பட்ட எம்.பிக்கும் கோபி தரப்பினருக்கும் உள்ள தொடர்பு பற்றிய தகவல் தெரியவந்துள்ளது.
இந்த எம்.பி. கடந்த நவம்பர் 26 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பிரபாகரனை பாராட்டிப் பேசினார்.
2014 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மாவீரர் தின உரை ஒன்றை நிகழ்த்த முயன்றார்.
நான் இதனை உடனடியாகவே சபையில் கண்டித்தேன் என எஸ்.பி. திஸாநாயக்க அதில் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் போதே சிறீதரன் எம்பி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESbLXkw7.html
Geen opmerkingen:
Een reactie posten