[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 04:00.46 PM GMT ]
கண்டியில் மல்வத்த மகாநாயக்கரை இன்று சந்தித்த பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் கருத்துரைத்த அமைச்சர் ஹக்கீம், நவநீதம்பிள்ளைக்கு வழங்கப்பட்ட அறிக்கையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்ததாக ஹக்கீம் தெரிவித்தார்.
இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கையின் அமைச்சரவையும் அங்கீகரித்துள்ளது.
எனவே அது தொடர்பில் தாம் நவநீதம்பிள்ளையிடம் அறிக்கை கையளித்தமை தவறாகாது என்று ஹக்கீம் கூறினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் ஒருதடவை நல்லிணக்க பரிந்துரை தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வழங்கியுள்ளமையை ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.
http://www.tamilwin.com/show-RUmsyESaLXkt1.html
இலங்கையின் அதிகாரத்துவத்துக்கு பிரித்தானியா அழுத்தம் கொடுக்கவேண்டும்!- எட் மிலிபான்ட்
[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 03:36.03 PM GMT ]
பிரித்தானிய தமிழர்களுக்கு விடுத்துள்ள புதுவருட செய்தியில் எட் மிலிபான்ட் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில் இரண்டு தரப்பாலும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு தொழில்கட்சி ஆதரவு வழங்கும் என்று எட் மிலிபான்ட் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அண்மையில் நிறைவேற்ற யோசனை இந்த விசாரணைக்கு வழிவகுத்துள்ளது என்று எட் மிலிபான்ட் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இந்த விசாரணையை முன்னெடுக்க பிரித்தானியாவில் அனைத்து கட்சிகள் மத்தியிலும் இணக்கப்பாடு அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESaLXkt0.html
Geen opmerkingen:
Een reactie posten