தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 25 april 2014

கண்டி திறந்தவெளியில் சிறையில் இருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம்

பொதுபல சேனா உடனடியாக தடைசெய்யப்பட வேண்டும்!- தவ்ஹித் ஜமாத் அமைப்பு
[ வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014, 11:15.39 AM GMT ]
பொதுபல சேனா அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக இலங்கை தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் ரப்பீக்தீன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் புனித அல்-குர் ஆனுக்கு மேற்கொண்டு வரும் அவதூறு மற்றும் முஸ்லிம்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை.  அந்த குற்றச்சாட்டுக்களை வன்மையாக கண்டிக்கின்றோம்.
இலங்கை தவ்ஹித் ஜமாத் அமைப்பை தடை செய்ய வேண்டும் என ஞானசார தேரர் கூறிவருகிறார்.
இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு அமைய ஜனநாயக ரீதியாக அமைதியாகவும் சட்டத்தை மதித்தும் செயற்படும் நாங்கள் வெளிநாடுகளில் நிதியை கோரியோ, நாட்டின் அரசியல்வாதிகளின் நிதிகளில் சிறப்புரிமைகளை பெற்று, அரசசார்பற்ற நிறுவங்களை நம்பி செயற்படும் அமைப்பு அல்ல.  நாங்கள் சுய சக்தியில தேசிய மற்றும் சமய ஐக்கியத்திற்காக செயற்பட்டு வரும் அமைப்பு.
ஆனால் பொதுபல சேனா அமைப்பு நாட்டின் சட்டத்தை கையில் எடுத்து, ஜனநாயக சட்டத்தையும் அமைதியையும் மீறி மிகவும் கலவரமாகவும் மோதலை ஏற்படுத்தும் வகையிலும் மோசமான வகையிலும் செயற்பட்டு வருவதை முழு நாடும் அறியும்.
அந்த அமைப்பின் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக சர்வதேச பொதுபல சேனா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பெயரிட்டு தடை செய்துள்ளது.
இதனடிப்படையில் தடை செய்யப்பட வேண்டியது எங்களது அமைப்பை அல்ல, இனவாத மற்றும் மத வாதத்தை தூண்டி பிரிவினைவாதத்தை வலுப்படுத்தி வரும் பொதுபல சேனா அமைப்பே தடைசெய்யப்பட வேண்டும் எனவும் ரப்பீக்தீன் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyERZLXfpz.html
கண்டி திறந்தவெளியில் சிறையில் இருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம்
[ வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014, 10:45.48 AM GMT ]
கண்டி பல்லேகலை திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற 4 கைதிகளை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலை திணைக்களம் மற்றும் பொலிஸார் இணைந்த இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பல்லேகலை திறந்தவெளி சிறைச்சாலைக்கு அருகில் பாயும் மகாவலி கங்கையை கடந்து இந்த கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் ரி.என்.உபுல்தெனிய தெரிவித்தார்.
தப்பிச் சென்ற நான்கு கைதிகளுக்கு பொறுப்பாக இருந்த இரண்டு அதிகாரிகளிடம் இது சம்பந்தமான விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவர்கள் தமது கடமையை தவறவிட்டுள்ளனர் என விசாரணையில் உறுதியானால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உபுல்தெனிய மேலும் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyERZLXfpy.html

Geen opmerkingen:

Een reactie posten