தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 17 april 2014

இலங்கையில் இனி பயங்கரவாதத்துக்கு இடம் இல்லை: கோத்தபாய ராஜபக்ச !

சர்வதேசத்தில் எதிர்ப்புகள் இன்றி பயங்கரவாத வலைப்பின்னல் தொடருகின்ற போதிலும் இலங்கையில் இனிமேல் பயங்கரவாதம் இல்லை என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் தற்போது நடைபெறுகின்ற 14வது பாதுகாப்பு சேவையின் ஆசிய கண்காட்சியில் நேற்று உரையாற்றும் போதே கோத்தபாய இதனை குறிப்பிட்டார்.
விடுதலைப்புலிகளின் வலைப்பின்னலின் மூலம் இலங்கைக்கு எதிரான பிரசாரங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவை நாடுகளில் உள்ள முன்னணி அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சில நாடுகள் தமது அரசியல் நோக்கங்களுக்காக இவ்வாறான அமைப்புக்களின் நடவடிக்கைகளை கண்டுகொள்வதில்லை.
இந்தநிலையில் சர்வதேசத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகளின் அடிப்படையில் மீண்டும் இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிகள் நடக்கின்றன.
இனவாத கருத்துக்களின் அடிப்படையிலேயே போரின் போது புலம்பெயர்ந்தோர் விடுதலைப்புலிகளுக்கு நிதியுதவிகளை வழங்கினர். இதன்படி விடுதலைப்புலிகளுக்கு 30 நாடுகளின் முன்னணி அமைப்புக்கள் நிதிகளை வழங்கின.
1993- 2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு 75 மில்லியன் டொலர்களை வரை வருடாந்த நிதிகள் கிடைத்து வந்தன.
2002 -2008 காலப்பகுதியில் அவர்களுக்கு 200 மில்லியன் டொலர்கள் கிடைத்தன என்றும் கோத்தபாய ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.
http://www.tamilwin.com/show-RUmsyESbLXkvz.html

Geen opmerkingen:

Een reactie posten