தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 15 april 2014

இலங்கை மீதான விசாரணை விரைவில்: பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்

இலங்கை தொடர்பில் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலருடன் எரிக் சொல்ஹெய்ம் பேச்சு

கடந்த வெள்ளிக்கிழமை வொசிங்டனில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, எரிக் சொல்ஹெய்ம், சிறிலங்காவில் எல்லா சமூகங்களுக்குமான உரிமைகள் மற்றும் ஜனநாயகத்துக்கு ஆதரவாக அமெரிக்கா செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, எரிக் சொல்ஹெமுடனான சந்திப்புக் குறித்து திருப்தி வெளியிட்டுள்ள நிஷா பிஸ்வால், அவரது அறிவை விட எல்லா இலங்கையர்களினதும் பாதுகாப்பு மற்றும் அவர்கள் மீது கொண்டுள்ள கரிசனை தம்மை ஈர்த்ததாக குறிப்பிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/65670.html

இலங்கை மீதான விசாரணை விரைவில்: பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்

தீர்மானத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்தை ஊக்குவிப்பதற்கு, நாம் அவர்களுடனும், அனைத்துலகப் பங்காளர்களுடனும் தொடர்ந்து பணியாற்றுவோம்” என்றும் அவர் தெரிவித்த அமைச்சர் வில்லியம் ஹேக்
சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து, விசாரணை தொடங்கப்பட்டு, ஆதாரங்களைத் திரட்டும் செயல்முறைகள் விரைவில் தொடங்கப்படும் என்று பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர்,
“துறைசார்ந்த நிபுணர்களால் இந்த விசாரணை நடத்தப்படுவதுடன், பரந்தளவிலான தகவல்கள் மற்றும் சான்றுகள் ஆய்வு செய்யப்படும்.
 http://www.jvpnews.com/srilanka/65673.html

Geen opmerkingen:

Een reactie posten