தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 16 april 2014

ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்

கோபியுடன் கூட்டமைப்பு எம்.பிக்கு நெருக்கமான தொடர்பு: உயர் கல்வியமைச்சர் குற்றச்சாட்டு
[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 03:22.14 PM GMT ]
சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று விடுதலை புலி உறுப்பினர்களுக்கு போக்குவரத்து வசதிகள் மற்றும் தங்குவதற்கு இடம் வழங்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது உயர் கல்வியமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.
இராணுவத்தினரால் விடுதலைப் புலிகள் என்று கூறப்பட்ட கோபி, அப்பன், தேவியன் ஆகிய மூன்று பேரும் நெடுங்கேணி காட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து உயர்கல்வி அமைச்சர் திஸாநாயக்க ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர், சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று தமிழீழ விடுதலை உறுப்பினர்களுக்கும் உடந்தையாக இருந்தாகவும், இவர்கள் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் சந்தித்து இயக்கத்தை புதுப்பிக்க முயற்சி எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கோபி என்ற நபர் பயன்படுத்திய தொலைபேசியை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியதையடுத்து, அதில் இருந்த விவரங்கள் எம்.பி. மற்றும் பயங்கரவாதத்திற்கு இடையிலான உறவை வெளிப்படுத்துவதாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒரு தேசிய ஹீரோவாக பாராளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி பாராட்டிப் பேசியதை நினைவு கூர்த்தார்.
இதேவேளை, எம்.பி. மற்றும் பலருடன் கோபி வைத்திருந்த தொடர்புகளை நிரூபிக்க ஆதாரம் இருப்பதாகவும், அவர்களது பெயர்கள் விரைவில் வெளிவிடப்படும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESaLXkty.html
ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்
[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 03:25.11 PM GMT ]
ஊடகவியலாளர் செல்வதீபன் மீதான கோழைத்தனமான தாக்குதல் சம்பவத்தினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டித்துள்ளது.
இது குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பொதுச செயலாளர் கஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,
ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் அவர்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு வடமராட்சியிலிருந்து சிறுப்பிட்டியிலுள்ள தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது அவரைப் பின்தொடர்ந்து சென்ற இனந்தெரியாத ஆயுததாரிகள் அவர் மீது இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர்.
செல்வதீபன் வலம்புரி, தினக்குரல், வீரகேசரி பத்திரிகைகளின் வடமராட்சி பிரதேச செய்தியாளராக பணியாற்றி வந்தார். 
தமிழ் மக்களது குரல்வளையை நசுக்கவும், அவர்கள் மீதான அடக்குமுறையை தொடரவும் முனையும் தரப்புக்களால் செல்வதீபன் கடந்த சில மாதங்களில் பலதடவை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக அறியமுடிகின்றது.
தமிழர் தாயகப் பிரதேசம் எங்கும் இராணுவத்தினரும், காவல்துறையினரும், உளவுத்துறையினரும் கடுமையான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் இத்தாக்குதலானது அரசுக்குத் தெரியாத வகையில் ஒருபோதும் இடம்பெற்றிருக்க முடியாது.
எனவே இத்தாக்குதலுக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
அரச அடக்குமுறைக்கு எதிராக நீதி கேட்டுப் போராடும் தமிழ் மக்களையும், மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்வதும், சித்திரவதை செய்வதும் அவற்றை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்களை தாக்குவதும் கொலை செய்வதும், ஊடக நிலையங்களை எரியூட்டுவதும் தமிழர் தாயகப் பிரதேசங்களில் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
செல்வதீபன் மீதான கோழைத்தனமான இத்தாக்குதல் சம்பவத்தினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
ஊடகங்கள் மீதும் உடகவியலாளர்கள் மீதும் சிறீலங்கா அரசினால் தொடர்ச்சியாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறைகளை கட்டுப்படுத்த சர்வதேச சமூகம் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கோருகின்றோம்.
நன்றி
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
http://www.tamilwin.com/show-RUmsyESaLXktz.html

Geen opmerkingen:

Een reactie posten