பேச்சுவார்த்தைக்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்!- தமிழ் தேசிய கூட்டமைப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014, 12:47.51 AM GMT ]
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள முஸ்லிம் மதத் தலைவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும், பௌத்த மஹாநாயக்கர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னம் அதிகரித்து காணப்படுகிறது.
பொது மக்களின் அன்றாட வாழ்க்கையில் இராணுவத்தினரின் தலையீடுகள் அதிகரித்துள்ளன.
தொடர்ச்சியாக கைதுகள் இடம்பெறுகின்றன. காணி சுவீகரிப்பு இன்னும் நிறுத்தப்படவில்லை.
இவ்வாறான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, சுமுகமான நிலைமை ஒன்று ஏற்படுத்தப்பட்டால் மாத்திரமே, இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் தலைவர்கள் ஜனாதிபதி மற்றும் மஹாநாயக்கர்களை சந்திக்கவுள்ளனர் - குர்ஆனில் சுமத்திய குற்றச்சாட்டை நிரூபித்தால் 10 லட்சம் ரூபா சன்மானம்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014, 12:33.45 AM GMT ]
அண்மைக்காலமாக முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு சவால்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. அனைத்திலங்கை ஜமியத்துல் உலமா சபை இதனை அறிவித்துள்ளது.
பௌத்த அடிப்படைவாத அமைப்பான பொதுபலசேனா கடந்த காலங்களில் மேற்கொண்டு வரும் செயற்பாடுகள் முஸ்லிம்களை மிகவும் பாதித்துள்ளது. இந்த செயற்பாடுகளை நிறுத்துவதற்கு ஜனாதிபதியும், மஹாநாயக்கர்களும் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தாங்கள் நம்புவதாக உலமா சபை தெரிவித்துள்ளது.
பொது பல சேனா புனித அல்-குர்ஆனில் சுமத்திய குற்றச்சாட்டை நிரூபித்தால்10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கத்தயார்-உலமாக்கட்சி
புனித அல்-குர்ஆனில் தக்கியா என்ற பெயரில் அடுத்தவர்களின் காணிகளை அபகரியுங்கள், அடுத்தவர்களின் சொத்துக்களைப் பறித்தெடுங்கள் என ஒரு வசனமேனும் குறிப்பிடப்பட்டிருப்பதாக பொது பல சேனா நிரூபித்தால் அவர்களுக்கு பத்து இலட்சம் ரூபா சன்மானம் வழங்கத்தயாரென உலமாக் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சவால் விடுத்துள்ளார்.
இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது,
அண்மையில் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையம் முன்பாக பேசிய ஞானசேர தேரர் அல்-குர்ஆன் பற்றி அடிப்படையற்ற விதத்தில் பேசியுள்ளார். இப்படியானதொரு வசனமுள்ளதாக தெரிவிப்பது உண்மைக்குப் புறம்பான அப்பட்டமான பொய்யென்பதை முஸ்லிம்களும் அறிவார்கள்.
ஆனால், சிங்கள மக்களை திசை திருப்புவதற்காகவே இவ்வாறு வேண்டுமென்றெ பொய் சொல்லப்பட்டுள்ளது. இத்தகைய பொய் வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தி உலகளாவிய சமாதான சமயத்தை கொச்சைப்படுத்துவதை உலமா கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
அதே போல், இப்படியொரு வசனம் குர்ஆனில் உள்ளதா? என்பதை அல்-குர்ஆனின் அந்த வசனத்தை பொது பல சேனாவோ அல்லது வேறு எவருமோ காட்டினால் அவருக்கு பத்து லட்சம் சன்மானம் வழங்க உலமாக் கட்சி தயாராகவுள்ளது. ஒரு மாத காலத்துள் இதனை நேரடியாகக் காட்ட முடியாத போது தமது பொய்யான வார்த்தைக்காக பொது பல சேனா பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.
அதே வேளை, இத்தேரரின் அல்-குர்ஆன் பற்றிய பொய் பற்றி பாராளுமன்றத்தில் விளக்கம் கொடுக்க ஆளுந்தரப்பு முஸ்லிம் உறுப்பினர்கள் முன் வர வேண்டும்.
பொதுவாக இஸ்லாம் என்றால் என்னவென்று தெரியாதவர்களையே முஸ்லிம் சமூகம் தமது பிரதிநிதிகளாக பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளதால் இத்தகைய விடயங்களுக்கு இவர்களால் பதில் தர முடியாத கேவலத்தை சமூகம் அனுபவிக்க வேண்டியுள்ளது.
ஆனாலும், இது பற்றி தெளிவாக அவர்களால் பேச முடியாது என்றிருப்பின், உலமாக்களிடமாவது எழுதிப்பெற்று வாசிக்க முன் வர வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமே இது விடயத்தை சகல இன மக்களுக்கும் தெளிவு படுத்த முடியும்.
இதனை விடுத்து, பொது பல சேனாவை கண்டிப்பதாக பத்திரிகை அறிக்கைளை விடுவதென்பது, அமைச்சரவையிலுள்ள கட்சிகளின் கோழைத்தனமானதும் ஏமாற்றுத் தன்மையுள்ளதுமான நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம்.
பொது பல சேனாவின் இஸ்லாம் அவமதிப்பு பற்றி உலமா சபையினர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுத வேண்டிய நிலை இன்று தோன்றியுள்ள நிலையில், முஸ்லிம் அமைச்சர்கள் புண்ணாக்கு விற்கவா அமைச்சரவையில் இருக்கிறார்கள்? என்றே கேட்கத்தோன்றுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten