2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி, முள்ளிவாய்க்காலில் போர் முடிவுற்றதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. ஆனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அதில் கொல்லப்பட்டார்கள். இந்த நாளை வருடந்தோறும் உலகில் உள்ள பல தமிழர்கள் நினைவு கூர்ந்து வருகிறார்கள். ஈழத்தில் நடைபெற்ற இன அழிப்பின் ஒரு அடையாளமாக இன் நாள் புலம்பெயர் தமிழர்களால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. லண்டனில் ரவல்கர் சதுக்கத்தில் இன் நிகழ்வு மே மாதம் 18 மாலையில் வழமையாக நடைபெற்று வந்தது. இருப்பினும் தற்போது அது எங்கே நடக்கவுள்ளது என்ற கேள்விகள் மக்கள் மனதில் எழுந்துள்ளது. மே 18ம் திகதிக்கு இன்னும் 30 நாட்களே உள்ள நிலையில், இன் நிகழ்வு லண்டனில் எங்கே நடக்க இருக்கிறது என்ற அறிவிப்பு இதுவரை எந்த அமைப்பும் வெளியிடவில்லை.
இதனால் முள்ளிவாய்க்காலில் தமது உறவுகளை இழந்து தவிக்கும், மற்றும் பிரித்தானியாவில் அவ்வாறு வாழ்ந்து வரும் தமிழர்கள் இம்முறை முள்ளிவாய்க்கால் தினம் எங்கே நடக்கிறது என்று தெரியாமல் அதிருப்த்தியடைந்துள்ளார்கள். பொறுப்புள்ள ஊடகம் என்றவகையில், அதிர்வு இணையம் இதுதொடர்பான செய்தியை இன்று வெளியிடுகிறது. சம்பந்தப்பட்ட அமைப்புகள் முள்ளிவாய்க்கால் தினம் எங்கே நடைபெற இருக்கிறது என்பதனை மக்களுக்கு உடனடியாக அறிவிப்பது நல்லது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6692
Geen opmerkingen:
Een reactie posten