தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 25 april 2014

புத்தரின் உருவத்தை பச்சை குத்திய வெளிநாட்டு பிரஜைகளை நாடு கடத்துவது சரியானதல்ல!– அமெரிக்க சங்கநாயக்கர்

புலிகள் ஆதரவு புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை! சான்றுகள் உள்ளதாக இராஜதந்திரிகளுக்கு விளக்கம்
[ வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014, 01:16.09 AM GMT ]
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய 16 அமைப்புகளை தடை செய்தமை மற்றும் 424 நபர்களை நாட்டுக்குள் நுழையவிடாமல் தடை விதித்தமைக்கான சான்றுகள் உள்ளன என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். 
இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கும் உயர்ஸதானிகர்களுக்கும் வெளிவிவகார அமைச்சில் வைத்து நேற்று வியாழக்கிழமை விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பயங்கரவாத நிதிப்படுத்தலுடன் தொடர்புடைய குழுக்கள், தனியாட்கள் மற்றும் பயங்கரவாதத்தை புதுப்பிக்க செயற்படுவோர் ஆகியோருக்கு எதிராக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி இராஜதந்திர சமூகத்திற்கு விளக்கமளிப்பதே முக்கிய நோக்கமாக இருந்தது.
ஐ.நா பாதுகாப்பு சபையின் ஒழுங்குவிதி 1373 க்கு அமையவே 16 குழுக்களையும் 424 தனியாட்களையும் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பவர்களாக அரசாங்கம் பெயரிட்டது எனவும், பயங்கரவாதத்திற்கு நிதிப்படுத்தலை ஒடுக்குவதற்காக ஒழுங்கு விதிகளை உருவாக்கி இவற்றின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இதனடிப்படையில் 65 பேர் கைது செய்யப்பட்டு 19 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.ஆவண சான்றுகள், தொடர்பாடல் சான்றுகள் உட்பட பல தகவல்கள் அரசாங்கத்திடம் உள்ளன.
வெளிநாட்டிலிருந்து செயற்படுவோர் மற்றும் இலங்கையிலிருந்து நிதி பெறுவோர் ஆகியோரிடையே பல வலையமைப்புகள் இருப்பதை அறிய முடிந்துள்ளது. விசாரணையின் போது பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆயுதங்கள், ஆவணங்கள் மற்றும் வேறு விடயங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
கிடைத்துள்ள சான்றுகளின் அடிப்படையில் இராணுவம், புலனாய்வு பிரசார நோக்கங்களுக்காக நிதிகள் அனுப்பப்பட்டது தெளிவாக தெரிகின்றது. இந்த விடயங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டு தமது ஆணையின் கீழ் இயங்கும் குழுவினருக்கும் வேறு ஆட்களுக்கும் நிதி அனுப்பப்பட்டுள்ளது.
விசாரணைகள் தொடரும் போதும் வேறு நபர்களின் அடையாளம் வகிபாகம் என்பன தெரியவரும் போதும் இவர்களின் தயாரிப்பு நடவடிக்கைகள் எவ்வளவு விசாலமானவை என்பதை அறிய முடிந்துள்ளது.
மிகச்சிக்கலான விரிவான திட்டமிடல் நடந்துள்ளது என்பதையிட்டு சந்தேகத்திற்கு இடமில்லையென அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையினதும் மீள் உருவாக்கத்தையும் முளையிலேயே கிள்ளி விடுவதும் ஆகவும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பதும் அரசாங்கத்தின் அதிமுக்கியமான கடமையாகும்.
மூன்று தசாப்தங்களாக பயங்கரவாதத்தினால் அவலமும், துன்பமும் பட்ட நாடு அரசாங்கத்திடமிருந்து இதைவிடவும் குறைவாக எதிர்பார்க்க முடியாது.
பயங்கரவாத செயற்பாடுகளின் பயமுறுத்தலை நீக்கிவிட்டதால் அரசாங்கத்தால் நேரகாலத்துடனான தீர்க்கமான நடவடிக்கை நல்ல பயனளித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
அந்தந்த பிரதேச மக்களிடமிருந்து கணிசமான தகவல்கள் கிடைப்பது உற்சாகமளிப்பதாக உள்ளது. தாம் மீளக்கட்டியெழுப்பும் தமது வாழ்வு குழம்பிப் போவதை தடுப்பதில் அந்த மக்கள் ஆர்வமாக உள்ளரென அமைச்சர் குறிப்பிட்டார்.
சுற்றுலா மற்றும் முதலீட்டுக்கு பயமுறுத்தல் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். இவை தேவையற்றவையற்றதுடன் விஷமத்தனமானதாகும்.
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதால் நன்மை பெற்றது இலங்கை மட்டுமல்ல முழு தெற்காசிய பிராந்தியமும் நன்மையடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த வகையில் கப்பல் பாதைகளின் பாதுகாப்பு, ஆட்கடத்தல், சிறு ஆயுதங்களை கட்டுபடுத்தல் என்பவற்றுக்கு இலங்கை கணிசமாக பங்களித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
இவ்வாறான நடவடிக்கைகளை கையாள ஆரம்பத்திலேயே தீவிர நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் இதன் போது வலியுறுத்தினார்.
இதில், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் கே.எச்.ஜி. ஹெந்த விதாரணவும் கலந்துகொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyERZLXgv6.html
புத்தரின் உருவத்தை பச்சை குத்திய வெளிநாட்டு பிரஜைகளை நாடு கடத்துவது சரியானதல்ல!– அமெரிக்க சங்கநாயக்கர்
[ வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014, 01:57.10 AM GMT ]
புத்தரின் உருவத்தை பச்சை குத்திய வெளிநாட்டு பிரஜைகளை நாடு கடத்துவது சரியானதல்ல என அமெரிக்க சங்கநாயக்கர் வல்லேபொல பியனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
உடலில் புத்தரின் உருவத்தை பச்சை குத்திய வெளிநாட்டு பிரஜைகளை நாடு கடத்துவதனை விடவும், அவர்களுக்கு பௌத்தம் பற்றிய தெளிவினை ஏற்படுத்துவது அவசியமானது.
புத்தரின் உருவம் மட்டுமன்றி வேறும் மதச் சின்னங்கள், உருவங்களும் துஸ்பிரயோகம் செய்யப்படுதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
நாளுக்கு நாள் வெளிநாட்டுப் பிரஜைகள் பௌத்த மதத்தின் மீது நாட்டம் கொண்டுள்ளனர்.
உடலில் பச்சை குத்திக் கொள்வது அந்த மதத்தின் மீது அவர்கள் காட்டும் அன்பையே பிரதிபலிக்கின்றது.
இவ்வாறு உடலில் புத்தரின் உருவத்தை பச்சை குத்தி வரும் நபர்களுக்கு பௌத்தத்தின் உன்னதம் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டுமே தவிரää அவர்களை நாடு கடத்துவது பொருத்தமற்றது.
தாய்லாந்தில் அதிக எண்ணிக்கையிலான பௌத்த பிக்குகள் உடலில் புத்தரின் உருவச் சின்னத்தை பச்சை குத்திக் கொண்டுள்ளனர்.
இது மதம் மீதான பக்தியே தவிர அகௌரவப்படுத்தும் நோக்கில் அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyERZLXgwz.html

Geen opmerkingen:

Een reactie posten