[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 12:41.45 PM GMT ]
இதனை நிறுத்தி ஏற்கனவே விண்ணப்பித்தவர்களை அவர்களின் தகைமையினைக்கொண்டு நியமிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற நீர்ப்பாசனத்துறை தொடர்பிலான ஆலோசனைக் கூட்டத்திலேயே இந்த கோரிக்கையினை பாராளுமன்ற உறுப்பினர் விடுத்தார்.
இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
நீர்ப்பாசன திணைக்களத்தில் 79 பேர் பல்வேறு துறைகளில் பல வருடகாலமாக அடெக் ஊழியர்களாக கடமையாற்றி வருகின்றனர். இவர்கள் தற்காலிகமாகவே கடமையாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த ஊழியர்களுக்கான நியமனத்துக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர்பாசனத் திணைக்களத்தில் கடமையாற்றும் தகைமையுள்ளவர்களும் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அவர்கள் யாரும் உள்ளீர்க்கப்படவில்லை. அதற்கு பதிலாக வேறு மாவட்டங்களில் இருந்து பெரும்பான்மையினத்தினை சேர்ந்தவர்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர்ப்பாசன திணைக்களத்தில் கடமையாற்றும் அடெக் ஊழியர்கள் உயர்தரத்தில் சித்திபெற்றவர்கள்.அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு அதற்கு பதிலாக பத்துக்கும் மேற்பட்ட பெரும்பான்மையினத்தினை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டமை பெரும் அநீயாயம் என்பதை அமைச்சரிடம் சுட்டிக்காட்டினேன்.
இதன்போது அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா, தகுதியுள்ளவர்களை இணைத்துக் கொள்வதற்கு தேவையான அமைச்சரவை பத்திரங்களை தயாரிக்குமாறு நீர்ப்பாசனத்துறை பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்தார்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் கடமையாற்றும் தகுதியானவர்கள் தொடர்பிலான பட்டியலை வழங்குமாறும் அமைச்சர் கோரினார்.
எனினும் ஏற்கனவே இது தொடர்பான பட்டியல் நீர்ப்பாசனத்துறை பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளதையும் மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் அறிக்கை சமர்ப்பித்துள்ளதையும் சுட்டிக்காட்டியதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyESaLXks3.html
கனடாவில் சிறப்புமிக்க பொது ஆயத்தில் ஏகோபித்த தீர்மானத்தை எடுத்த தமிழர் சமூகம்
[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 02:08.17 PM GMT ]
தமிழ் சமுதாயத்தின் பொது ஆயம் எடுத்த தீர்மானமானது, கனடிய அரசின் மூன்று மட்ட அரசினதும், அரசியல் பிரதிநிதிகளுக்கும் பொருத்தமானதாக அமைந்தது.
இந்த பொது ஆயத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அனைத்து மட்ட அரசியல் பிரதிநிதிகளின் வருகையில் இருந்து தமிழ் சமுதாயத்திற்கென வழங்கப்பட்ட அவர்களின் ஆதரவை அவதானிக்க முடிந்தது.
தமிழ் அமைப்புக்கள் ஒன்றுகூடி கலந்து கொண்ட இந்த பொது ஆயத்தினூடாக கனடா வாழ் தமிழ் சமூகம் ஒரே குரலில் வலுவான பிரேரணையை முன்வைத்ததோடு, கனடா வாழ் தமிழ் மக்கள் மீது அக்கறையுள்ள அரசியல் மட்டங்களுக்கும் நல்லெண்ண ஆர்வலர்களுக்கும் தமிழ் மக்கள் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு தொடர்பு கொள்ள ஒரு பொது தளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். அனைத்து அமைப்புக்களும் பொது ஆயத்தின் தீர்மானத்தை உறுதியோடு அதற்குரிய இடத்திற்கு எடுத்து செல்வதற்கு திட சங்கற்பம் எடுத்துக் கொண்டுள்ளனர்.
கனடியத் தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிப்பதிலும் தொடர்ந்தும் பங்கேற்ற அனைத்து அமைப்புகளுடனான தொடர்புகளை ஏற்படுத்துதலிலும் ஆர்வலர்கள் அக்கறையாளர்களுடனான தொடர்புகளை ஏற்படுத்தி தொடர்ந்து அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்படுவதிலும் பொது ஆயத்தை ஒழுங்குபடுத்தி நடாத்திய ஏற்பாட்டாளர்கள் தொடர்ந்து பொறுப்பேற்று செயற்படுவார்கள் என கனடியத் தமிழர் தேசிய அவை தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyESaLXks5.html
Geen opmerkingen:
Een reactie posten