தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 30 april 2014

காதலித்து ஏமாற்றிய தமிழகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி சிறையில்!!!


தமிழகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி வருண் என்பவர் பிரியதர்ஷினி என்ற பெண்ணை காதலித்து ஏமாற்றியதற்காக கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வளசரவாக்கத்தை சேர்ந்த பிரியதர்ஷினியும் தற்போது அருப்புக்கோட்டையில் ஏஎஸ்பியாக உள்ள வருண்குமாரும் ஐபிஎஸ், ஐஏஎஸ் தேர்வுக்கு படிக்கும்போது காதலித்துள்ளனர்.

இதனையடுத்து 2011ல் இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால், வருண்குமார் ஐபிஎஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டதும், பிரியதர்ஷினியை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.இதுபற்றி பிரியதர்ஷினி, சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதற்கிடையே தன்னை பொலிசார் கைது செய்யலாம் என்று கருதிய வருண், உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதை எதிர்த்து பிரியதர்ஷினி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, கடந்த பிப்ரவரி 14ம் திகதி ஜாமீனை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும் வருணை பொலிசார் கைது செய்யவில்லை. எனவே இதை தொடர்ந்து பிரியதர்ஷினி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வருண் சரணடைந்துள்ளார்.

அப்போது பிரியதர்ஷினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை வருண் கைது செய்யப்படவில்லை,எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்று வாதிட்டுள்ளார்.

இந்த வாதத்தை ஏற்ற மாஜிஸ்திரேட், வருணை மே 12ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து பொலிசார் வருணை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இதுகுறித்து பிரியதர்ஷினியின் தந்தை கோகுல் கூறுகையில், கடந்த நான்கு ஆண்டுகளாக பல போராட்டங்களை சந்தித்து விட்டோம். இப்போது அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டது நியாயத்துக்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் பணியில் இருக்கும் ஜ.பி.எஸ் அதிகாரி சிறைக்கு செல்வது இதுவே முதன் முறையாகும் என்பது குறிபிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten