தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 15 april 2014

“புதியவன்” பிரதம ஆசிரியர் வி.எஸ்.சிவகரன் மகிந்தருக்கு அவசர கடிதம்

சிறுவர் மற்றும் பெண் துஸ்பிரயோக சம்பவங்களை விசாரிக்க விசேட நீதிமன்றம்

நாட்டில் இடம்பெற்று வரும் சிறுவர் மற்றும் பெண்கள்; துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்ய விசேட நீதிமன்றமொன்று அமைக்கப்பட உள்ளது. சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குற்றச் செயல்களை தடுத்து நிறுத்தும் நோக்கில் விசேட நீதிமன்றமொன்று அமைக்கப்பட உள்ளதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இவ்வாறான இரண்டு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.விரைவில் குருணால் மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/65664.html

“புதியவன்” பிரதம ஆசிரியர் வி.எஸ்.சிவகரன் மகிந்தருக்கு அவசர கடிதம்

இது தொடர்பாக நேற்று(14) ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகின்றதா? ஊடக சுதந்திரத்தை நசுக்கும் ஆட்சியாளர்கள்.
ஊடக சுதந்திரத்தை நசுக்குவதும், சட்ட நிர்வாகத்தின் அரசியல் மயமாக்களும் தான் தொடர்ந்தும் இலங்கையில் இடம் பெறுகின்றது.
மன்னாரில் இருந்து வெளி வரும் புதியவன் நாழிதழ் அலுவலகத்தை தாக்குவேன், அதன் ஆசிரியருக்கு கொலை அச்சுறுத்தல் என்பனவற்றை நேரில் சென்று குண்டர்கள் சகிதம் ஊடகத்துறைக்கு சவால் விடுத்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதின் தொடர்பாக கடந்த 10-4-2014 அன்று மாலை 5.45 மணிக்கு மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. (முறைப்பாட்டு இலக்கம்-87/9) ஆனால் 5 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் இது வரை விசாரிக்கப்படவில்லை.
குற்றவியல் குற்றமான (கிருமினல்) கொலை அச்சுறுத்தலுக்கு பொலிஸ் திணைக்களம் இது வரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? 48 மணி நேர நியம முறையும், கிருமினல் குற்றங்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய விதி முறையும் இலங்கை சட்டத்தில் ஆளும் கட்சி அரசியல் வாதிகளுக்கு விலக்களித்துள்ளீர்களா? என்கின்ற சந்தேகம் எழுகின்றது.
அல்லது ஊடகத்துறையை நசுக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலா? இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் சட்டம் சாமானியர்களுக்கு மட்டுமா? ஊடகத்துறைக்கே இந்த நிலை என்றால் நீதியின் பரிபாலனத்தில் இலங்கையில் சட்ட ஆட்சி நடைபெறுகின்றதா? எனும் ஐயம் சாதாரண பொது மக்கள் மத்தியில் எழுகின்றது.
எனவே ஊடக சுதந்திரத்தை மீறும் இந்த சனநாயக படுகொலைக்கு தங்கள் அதிகாரத்தின் கீழ் உள்ள பொலிஸ் திணைக்களததின் அசமந்தப்போக்கிற்கு காரணம் என்ன? அல்லது ஆளும் கட்சிக்கு சார்பாக மட்டும் தான் அரச நிர்வாகம் இயங்கும் என்பது எழுதப்படாத விதியா?
இலங்கையிலே ஊடகச்சுதந்திரத்தை பேணுவதற்கும், சுய பாதுகாப்பிற்கும் பொறுப்புக்கூறுவது யார்?எனவே உங்கள் அரசியல் வாதிகளையும், பொலிஸ் திணைக்களத்தையும் நேர்மையாக இயங்க நடவடிக்கை எடுப்பிர்களா? எனக் கேட்டுக் கொள்ளுகின்றோம். என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/65655.html

Geen opmerkingen:

Een reactie posten